Tag Archives: tamil screenplay

Kochadaiyaan Vimarsanam in Tamil – கோச்சடையான் விமர்சனம் – 52%

கோச்சடையான் விமர்சனம்

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரை தன் முதல் படத்திலேயே தோற்கடித்திருக்கிறார் இயக்குநர் சவுந்தர்யா.

கோச்சடையானை விமர்சிக்க இந்த ஒற்றை வரி போதும்!

tamil screenplay

”விமர்சிக்க முடியாத பல திரைப்படங்கள் வரும். விமர்சிக்கவேண்டிய படங்கள் அவ்வப்போது வரும். கோச்சடையான் விமர்சிக்கக்கூடாத படம். என்னவோ தெரியவில்லை கோச்சடையானை விமர்சிக்க மனம் ஒப்பவில்லை.

படம் பார்த்து முடிந்தவுடன் நண்பர் ஒருவர் ”படம் எப்படி?” எனக் கேட்டபோது, அவரிடம் நான் சொன்ன பதில் இதுதான்.
”நீர் விமர்சிக்க வேண்டாமய்யா, என்ன கதை? அதையாவது சொல்லும்!” தொந்தரித்துக் கேட்டார்.
வழக்கமான ராஜாக்கள் காலத்து கதைதான்.

கலிங்காபுரி, கோட்டைப்பட்டினம் என ஒன்றுக்கொன்று சளைக்காத இரண்டு நாடுகள். மண் சேர்க்கும் அரசர்களின் ஆசைக்கு பலிகடா ஆகும் படைத் தளபதியாக அப்பா கோச்சடையான் (ரஜினி 1). தந்தை ரஜினியின் மரணத்திற்குக் காரணமான இரண்டு ராஜாக்களையும் பலிவாங்கும் படைத்தளபதியாக மகன் ராணா (ரஜினி 2)
இதற்குள் ஒரு காதல். அம்புட்டுதான் கதை. ஆனால்……

தொழிற்நுட்ப புரட்சியின் பங்களிப்போடு உருவாக்கப்பட்ட கோச்சடையானில் கதை முக்கியமல்ல என்றாலும், அதற்கும் முக்கியத்துவம் கொடுத்து, குழப்பம் இல்லாத திரைக்கதையை வடித்துக் கொடுத்திருக்கிறார் கே.எஸ்.ரவிக்குமார். வசனமும் அவரே.

”எதிரிகளை வெல்ல பல வழிகள் இருக்கு. முதல் வழி மன்னிப்பு, நண்பனை எதிரியாக்கிக்கொள்ளாதே, வேஷம் போடுறவனுக்கு பகல் என்ன இரவு என்ன, சூரியனுக்கு முன்னரே எழுந்தால் அந்த சூரியனையே வெல்லலாம்” என வாழ்வியல் சார்ந்த வசனங்கள் ஏராளம்.

படத்தில் நிஜக் கதைமாந்தர்கள் ஒருவர்கூட கிடையாது. அவர்களின் உருவத் தோற்றங்களை மட்டும் வைத்துக்கொண்டு, கனிணியின் சாகசத்தோடு வென்று காட்டியிருக்கிறார் இயக்குநர் சவுந்தர்யா.

படம் தொடங்கிய முதல் ஐந்து நிமிடம் மட்டுமே கதை மாந்தர்களாக காட்சியளிக்கிற கணினி மாந்தர்கள் நம்மை விட்டு விலகி நிற்கிறார்கள். அதன்பிறகு அப்படியே நம் மனதோடு ஒட்டிக்கொள்கிறார்கள் படம் முடியும்வரை. காரணம், தொழிற்நுட்பம்.

இந்தியச் சினிமாவுக்கு இது புதுசு. பட்ஜெட் இருந்தால் அவதாரையும் மிஞ்சக்கூடிய வகையில் நம்மிடம் அறிவும், தொழிற்நுட்பமும் இருக்கிறது என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார் சவுந்தர்யா.

கதைமாந்தர்களின் கண் அசைவு, நடை போன்றவற்றில் துல்லியமான பாவணைக் குறைகள் இருந்தாலும் அவற்றைப் புறந்தள்ளிவிடுகிறது மனசு. காரணம், படத்தில் காட்டப்பட்டுள்ள பிரம்மாண்டம்.

அரண்மனைக் காட்சிகளிலிருந்து போர்க்கள காட்சிவரை, காட்சிக்கு காட்சி நாம் இதுவரை பார்த்திராதது.

கோச்சடையான் வெளிவருவதில் ஏன் சிக்கல் எனத் தெரியவில்லை. பத்து நாட்களுக்கு முன்பாக வந்திருந்தால், வசூலை அள்ளிக் குவித்திருக்கும் என்றாலும், இப்போதும் அதற்குக் குறையிருக்காது என்று நம்பலாம்.

குடும்பத்தோடு பார்த்து மகிழ, முக்கியமாக குழந்தைகளோடு பார்த்து மகிழவேண்டிய படம்.

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரை தன் முதல் படத்திலேயே தோற்கடித்திருக்கிறார் இயக்குநர் சவுந்தர்யா.

கோச்சடையானின் விமர்சனத்திற்கு இந்த ஒற்றை வரிபோதும்.

மதிப்பெண்கள் 52%

Vallavanukku Pullum Ayudham Vimarsanam 38%

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் விமர்சனம்

கதையின் நாயகனாக சந்தானம் தூள்குழப்பியிருக்கும் படம்.

Tamil Screenplay

கதை

சிறையிலிருந்து வெளிவரும் சந்தானத்தின் இளைய தாய்மாமனை போட்டுத்தள்ளி, தானும் இறந்துபோகிறார் சந்தானத்தின் அப்பா. அப்போது சந்தானம் தொட்டில் குழந்தை. சந்தானத்தின் தந்தையால் வெட்டப்பட்டு இறந்துபோனவரின் அண்ணன் (மூத்த தாய்மாமன்), தன் தம்பியைக் கொன்றவனின் குடும்பத்தையே அழித்துவிடவேண்டும் என தன் இரண்டு குழந்தைகளோடு அருவாள் முனையில் சபதம் ஏற்கிறார். இனி இந்த ஊரில் இருந்தால் தன் மகனையும் கொன்றுவிடுவார்கள் என சந்தானத்தின் தாய் சென்னையில் குடியேறுகிறார்.

26 ஆண்டுகளுக்குப் பிறகு கதை உடனடியாக நகர்ந்துவிடுகிறது.

அதற்குள் அம்மாவும் இறந்துபோக, அநாதையான சந்தானம், இப்போது பழைய சைக்கிளில் தண்ணீர் கேன் சப்ளை செய்யும் தொழிலாளி. “இனி சைக்கிளில் சப்ளை செய்தால் உனக்கு வேலை இல்லை. உடனே ஒரு குட்டியானை வாங்கு” என முதலாளி சொல்ல, வேலை இழக்கும் சந்தானம் குட்டியானை வாங்குவதற்காக பணத்திற்கு அலைய, தான் பிறந்த ஊரில் தன் அப்பாவிற்கு சொந்தமாக ஐந்து ஏக்கர் நிலம் இருக்கிற தகவல் வந்துசேர்கிறது. அந்த இடத்தை விற்பனை செய்வதற்காக தன் பிறந்த ஊருக்குச் செல்ல, இவரைப் பழிவாங்க 26 ஆண்டுகளாக காத்திருக்கும் வில்லன் குடும்பத்தினரின் வீட்டுக்குள்ளேயே விபரீதமாக அடைக்கலமாகிறார்.

வீட்டில் அடைக்கலமாகியிருப்பது தாங்கள் தேடிக்கொண்டிருக்கும் பகையாளியின் மகன் என்கிற உண்மை வில்லன் கோஷ்டிகளுக்குத் தெரியவந்தாலும் அவர்களால் உடனடியாக சந்தானத்தைக் கொல்ல முடியவில்லை. காரணம்,

வில்லன் குடும்பத்திற்கென ஒரு கொள்கை இருக்கிறது. தன் வீட்டிற்குள் வைத்து யாரையும் இவர்கள் பழிவாங்குவது கிடையாது. வெட்டுக்குத்து, அடிதடி எல்லாம் வீட்டிற்கு வெளியேதான்.

வீட்டுவாசலைத் தாண்டினால் தன்னைக் கொன்றுவிடுவார்கள் என்கிற விஷயம் சந்தானத்திற்கு தெரியவர, அவரும் வாசலைத் தாண்டாதாவறு தகிடுதித்தங்கள் செய்து பிழைக்கிறார். இந்தக் களேபரங்களுக்கு மத்தியில் வில்லனின் மகளுக்கு சந்தானத்தின் மீது காதல் பிறக்க, சந்தானம் பழிவாங்கப்பட்டாரா, காதலியை அடைந்தாரா என்பதை வழக்கமான தமிழ்ச் சினிமா இலக்கண விதிகளுக்கு மீறாமல் படம் காட்டியிருக்கிறார்கள்.

சில காட்சிகளில் மட்டுமே சந்தானம் சிரிக்க வைக்கிறார். சில காட்சிகளில் சிறப்பாக நடிக்கவும் செய்திருக்கிறார். ஆனால், படத்தின் ஆரம்பக் காட்சியிலிருந்து முடிவுக் காட்சிவரை அடுக்கடுக்கான லாஜிக் இடர்பாடுகள் வந்து இம்சை படுத்துவதால், படத்தோடும் கதையோடும் ஒன்ற முடியவில்லை.

கதைக்குத் தேவையில்லாத டம்மிக் காட்சிகளே படத்தை அதிகமாக ஆக்கிரமித்துக் கொள்ள, சீரியஸான ஒரு கதைக்குள் காமடி எப்போது வரும் என்கிற மனநிலையோடு  ஏங்க வைக்கிறார்கள்.

பெரும்பாலான காட்சிகள் வீட்டிற்குள்ளேயே சுற்றிச்சுற்றி வருவது, சந்தானத்தைக் கொல்ல எளிய வழிகள் இருக்கும்போது, அதற்காக வில்லன்கள் பெரிதாக மெனக்கெடுவது, இறுதிக் காட்சியில் அத்தனை அடிவாங்கிய பிறகும் வீறுகொண்டு எழுவது, நாயகியை முறைமாமன் எளிதாக விட்டுக்கொடுப்பது என நிறைய காட்சிகள் சலிப்பைக் கொடுக்கின்றன.

நாயகி ஆஸ்னா சாவேரி அழகாக இருக்கிறார். இறுதிக் காட்சியில் தன் திறமையை வெளிக்காட்டுகிறார். பின்னணி இசையும், பாடல்களும் சுமார் ரகத்திற்கும் கீழே. படத்தின் பிற கதை மாந்தர்கள் நாடக பாணியில் நடிப்பைக் கொட்டியிருக்கிறார்கள். ஒளிப்பதிவு பலம் சேர்த்திருக்கிறது (சக்தி, ரிச்சார்ட் நாதன்).மதிப்பெண்கள் 38%

 

Tamil Screenplay – Tamil Thiraikathaikal – Niram Marum Mugangal – Scene 3

நிறம் மாறும் முகங்கள்

திரைக்கதை

(தொலைக்காட்சி நெடுந்தொடருக்கானது)

காட்சி 3
DAY / INT / EXTN

சந்திராவின் வீடு.
சோபாவில் அமர்ந்தபடியே சந்திரா அழுதுகொண்டிருக்கிறாள்.
சந்திராவின் மாமியார், தன் மகனும் சந்திராவின் கணவருமான சேகரிடம்  செல்போனில்  பேசிக்கொண்டிருக்கிறார். பெயர் பார்வதி அம்மாள். வயது 60.

பார்வதி அம்மாள் – ‘‘எல்லா எடத்துலேயும் தேடியாச்சி…கணேசன காணோம்…நீ உடனே வீட்டுக்கு கௌம்பி வா….ஸ்டேஷன் வரைக்கும் போய் எதுக்கும் ஒரு கம்ப்ளெய்ன்ட் கொடுத்துறலாம்….லேட் பண்ண வேண்டாம்….எனக்கு பயமா இருக்குப்பா….’’

சேகர்குரல் – ‘‘பக்கத்து வீட்டு இன்ஸ்பெக்டரும் அதைத்தான் சொன்னாரு…அம்மா…நான் வீட்டுக்கு வந்து….. அப்புறமா போலீஸ் ஸ்டேஷன் கௌம்பறதுக்கு எக்ஸ்ட்ரா ஒரு மணி நேரம் ஆகும்…… ஒன்னு பண்ணுங்க நீங்களும் சந்திராவும் ஸ்டேசனுக்கு வந்துருங்க…நான் ஆபிஸ்லேர்ந்து நேரா அங்க வந்துர்றேன்…சந்திராகிட்ட சண்டை ஏதும் போடாதீங்க…கணேசனுக்கு ஒன்னும் ஆயிருக்காது….போனை சந்திராகிட்ட குடுங்க…’’ (குரலில் பதட்டம், வேகம்)

பார்வதி அம்மாள் சோபாவில் அமர்ந்து அழுதுகொண்டிருக்கும் சந்திராவைப் பார்க்கிறார்…
சந்திராவை நோக்கி நடந்துவருகிறார். போனை சந்திராவை நோக்கி நீட்டுகிறார்…

பார்வதி அம்மாள் – ‘‘ஏய்…ந்தா….உங்கிட்ட பேசணுங்கறான்….’’

சந்திரா போனை மாமியாரிடமிருந்து வாங்குகிறாள். போனை காதில் வைக்கிறாள்.

சேகர் குரல் – ‘‘ஏண்டி….மத்தியானம் தூங்காதேன்னு உனக்கு எத்தனை தடவை சொல்றது. நாலு மணிக்கு ஸ்கூல் விடும்னு தெரியும்…மூணு மணிக்கே ஆட்டோக்காரர் வந்துடுறாரு…..அவரு வரும்போது நீ ரெடியா இருக்கவேண்டாம்..மெதுவா எழுந்திருச்சி முகம் கழுவி, பவுடர் பூசி புதுப்பொண்ணு மாதிரி அலங்கரிச்சிக்கிட்டு…அதுக்கு அப்புறம் நீ கௌம்பிப் போறது எனக்கு தெரியாதுன்னு நெனைக்கிறியா…செய்யறதெல்லாம் நீ செஞ்சிட்டு ஆட்டோக்காரர் மேல பழி போட மனசு எப்படித்தான் வருதோ….அம்மாவ கூட்டிட்டு போலீஸ் ஸ்டேஷன் வந்துரு….நான் கால் மணி நேரத்துல அங்க இருப்பேன்…’’ (குரலில் அதட்டல், எரிச்சல்)

போன் கட் செய்யப்படும் சத்தம் கேட்கிறது.
சந்திராவும் போனை கட் செய்துவிட்டு தன் மாமியாரை முறைத்துப் பார்க்கிறாள்.
பார்வதி அம்மாளும் பதிலுக்கு முறைத்தபடியே…

பார்வதி அம்மாள் – ‘‘இந்த மொறைக்கற வேலையெல்லாம் வேண்டாம்….அவங்கிட்ட நீ தூங்கற விஷயத்தை நான் சொல்லவேயில்ல…’’

காலிங்பெல் அடிக்கும் சத்தம் கேட்கிறது…சந்திரா முகத்தைத் துடைத்தபடியே ஒருவித அச்சத்துடன் போய் கதவைத் திறக்கிறாள். கதவுக்கு வெளியே வாணி நிற்கிறாள்..
வாணி உள்ளே பதட்டத்தோடு நுழைந்தபடியே…

வாணி – ‘‘சந்திரா…என் வீட்டுக்காரருக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்லிட்டேன்..அவரும் நேரா போலீஸ் ஸ்டேஷன் போய் கம்ப்ளெய்ன்ட்ட குடுத்திரச் சொல்லிட்டாரு…கமிஷனர் ஆபிஸ்லேயிருந்து இந்நேரம் நம்ம ஏரியா ஸ்டேஷனுக்கு போன் போயிருக்கும்….நீ ஒன்னும் கவலப்படாத…போலீஸ் டிபார்ட்மென்ட்ட பொருத்தவரைக்கும் எல்லா இடத்துலேயும் என் வீட்டுக்காரருக்கு தெரிஞ்சவங்க இருக்காங்க…எப்படியும் இன்னும் ஒரு மணி நேரத்துல உம் பையன கண்டுபிடிச்சிருவாங்க…’’

வாணி பேசுவதை பார்வதி அம்மாள் கவனிக்கிறாள்.
பின்னர் சந்திராவை பார்க்கிறார்.

பார்வதி அம்மாள் – ‘‘ஏய்…நீகௌம்புறியா…இல்ல வாணிய கூட்டிட்டு நான் ஸ்டேஷன் கௌம்பட்டுமா…’’

பார்வதி அம்மா சந்திராவை இப்படி பேசுவதை வாணி பார்க்கிறாள்.

வாணி – ‘‘அம்மா…அவளே மகனக் காணோம்ன்னு பதட்டத்துல இருக்கா…இந் நேரத்துல உங்க சண்டைய வச்சிக்க வேண்டாம்…மொதல்ல கௌம்பற வழியப் பாருங்க…’’ (கெஞ்சல், அவசரம்)

சந்திரா வாணியைப் பார்க்கிறாள்.

சந்திரா – ‘‘வாணி…நீயும் வாயேன்…எனக்கு போலீஸ் ஸ்டேஷன்னாலேயே ஒரு மாதிரி இருக்கு…’’

அழுதபடியே பேசுகிறாள்…

வாணி – ‘‘உங்கள கூட்டிட்டுப் போறதுக்குத்தான் வந்திருக்கேன்..என் வீட்டுக்காரரும் ஸ்டேஷனுக்கு வந்துர்றேன்னு சொல்லியிருக்காரு..உன் வீட்டுக்காரர்கிட்டே பேசிட்டாரு….சீக்கிரம் கௌம்புங்க…’’

மூவரும் புறப்படுகின்றனர்.
சாவித்திரி வீட்டைப் பூட்டுகிறாள்.
வெளியே ஆட்டோக்காரர் தயாராக நிற்கிறார்.
மூவரும் ஆட்டோவில் ஏறி அமர்கின்றனர்.
ஆட்டோக்காரர் ஆட்டோவை ஸ்டார்ட் செய்கிறார்.
ஆட்டோ புறப்பட்டுச் செல்கிறது.

(தொடரும்)

Thenali Raman Vimarsanam – Review – 36%

தெனாலிராமன் விமர்சனம் 36%

 Thenali Raman Vimarsanam – Review – 36%

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் வடிவேலு இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் படம்.

நகைச்சுவைக்கு இவரை விட்டால் ஆள் இல்லை என கடந்த பத்து ஆண்டுகளாக தமிழ்ச் சினிமாவை தன் உடல்மொழியால் கவர்ந்து, கட்டிப்போட்டு வைத்திருந்த வடிவேலு, கடந்த சட்டமன்றத் தேர்தலில் எடுத்த முடிவால், தமிழ்ச் சினிமாவிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். பின்னர் சுதாரித்துக்கொண்டவர், அரசியலைத் துறந்து சகஜநிலைக்கு வருவதற்குள், அவரின் திரைத்துறை சகாப்தத்தில் மூன்று ஆண்டுகள் காணாமல் போயிற்று. ஒருவழியாக, ‘தெனாலிராமன்’ மூலம் மறுபிரவேஷம் செய்திருக்கிறார். அதுவும் கதையின் நாயகனாக.

 

‘தெனாலிராமன்’ என தலைப்பு வைத்தாலும், படத்திற்குள் நவீன தெனாலிராமனை இன்றைய காலத்திற்கு ஏற்ப வடிவமைத்துக் காட்டியிருப்பார்கள் என்கிற நமது கற்பனையை எடுத்த எடுப்பிலேயே அறுத்து எறிந்துவிடுகிறார் இயக்குநர் யுவராஜ். முழுக்க முழுக்க அந்தக் காலத்துக் கதைதான். அதுவும், தென்னிந்திய வரலாற்றுக் கதைகளில் பிரதான இடம்பெற்ற அமைச்சர் தெனாலிராமன் கதையை, அந்தக் காலத்தில் நடப்பதுபோலவே காட்டியிருக்கிறார்கள். எனவே, அக்மார்க் வரலாற்றுப் படம்.

வடிவேலுக்கு இதில் இரட்டை வேடம். ஒருவர் நாடாளும் அரசனாக. மற்றொருவர் நாவண்மை, வீரம், அறிவு படைத்த அமைச்சராக.

விகட நகரம் என்கிற நாட்டை ஆள்கிற அரசர் வடிவேலுவின் மந்திரி சபையில் ஒன்பது பேர் அமைச்சர்களாக இருக்கிறார்கள். சீனாவிலிருந்து வருகிற வியாபாரிகள் இந்த விகடநகரத்தில் வணிகம் செய்ய நினைக்க, ஒன்பது அமைச்சர்களில் ஒருவர் மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கிறார். மற்ற எட்டுபேரும் சீன வியாபாரிகளிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு, வியாபாரத்தைத் தொடங்க அனுமதி கொடுக்கின்றனர். எனவே, எதிர்ப்பு தெரிவித்த அமைச்சர் மட்டும் கொல்லப்படுகிறார். இந்த விஷயம் அரசராக இருக்கிற வடிவேலுக்குத் தெரியாது. தன் அமைச்சர்கள் அனைவரும் நேர்மையானவர்கள் என அவர் நம்பிக் கொண்டிருக்கிறார். கொல்லப்பட்ட அமைச்சரின் மரணம் இயற்கையானது என மற்ற எட்டு அமைச்சர்களும் அரசர் வடிவேலுவிடம் தெரிவிக்க, அவரும் நம்பிவிடுகிறார்.

இப்போது கொல்லப்பட்ட அமைச்சருக்குப் பதிலாக வேறு ஒருவரை தேர்ந்தெடுக்கவேண்டும். அதற்கான தேர்வு நடத்தப்படுகிறது. மற்ற எட்டு அமைச்சர்களும் தங்களோடு ஒத்துழைக்கிற ஒருவரை இரகசியமாகத் தேர்வு செய்யும்பொருட்டு திட்டமிடுகின்றனர். ஆனால், அதே தேர்வுக்காக வரும் இரண்டாவது வடிவேலுவின் சாமர்த்தியத்தால் அந்த நபர் தேர்வில் தோற்றுப்போக, இரண்டாவது வடிவேலு அமைச்சராகிவிடுகிறார். அதாவது, அரசர் வடிவேலுவின் அமைச்சரவையில் இன்னொரு வடிவேலு. ஆக, இரண்டு வடிவேல்களும் சேர்ந்து நம் வயிற்றைப் பதம்பார்க்கப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு நம்மை அப்பிக்கொள்கிறது.

அமைச்சரவையில் இடம்பெற்ற வடிவேலு நாவண்மை மிக்கவர். அதி புத்திசாலி. இவர் அமைச்சரவைக்குள் இடம்பெற்றதன் நோக்கம் அரசர் வடிவேலுவைக் கொல்லவேண்டும் என்பதற்காகத்தான். காரணம், அரசருக்கு நாட்டை ஆளத் தெரிவில்லை. மக்கள் அனைவரும் பஞ்சம், பசி, பட்டினியோடு வாழ்ந்துவருகிறார்கள். அரசரைக் கொன்றால் மட்டுமே மக்கள் விமோசனம் பெறுவார்கள் என்பது இவரின் திட்டம். இதற்கு பின்புலமாக போராளிக் கூட்டம் ஒன்று செயல்பட, அவர்களின் தூதுவனாகவே அமைச்சர் வடிவேலு அரண்மனைக்குள் நுழைந்திருக்கிறார் என்பதை அவ்வப்போது நமக்கு காட்டுகிறார்கள்.

அரசரைக் கொல்வதற்காக அமைச்சர் பொறுப்பேற்று வந்திருக்கும் வடிவேலுக்கு விரைவில் உண்மை தெரியவருகிறது. அரசர் நல்லவரே, எட்டு அமைச்சர்களும்தான் கெட்டவர்கள். எனவே, எட்டு அமைச்சர்களையும் அரசரிடமிருந்து நீக்கிவிட்டால், நாடு சுபிட்சமாகிவிடும் என்பதை உணர்கிறார் அமைச்சர் வடிவேலு.

ஆனால், எட்டு அமைச்சர்களும் வடிவேலுவை அமைச்சர் பதவியிலிருந்து தூக்கி எறியத் திட்டம் போடுகிறார்கள். அந்த திட்டம் வெற்றிபெறுகிறது. அமைச்சர் வடிவேலு தன் பதவியை  இழக்கிறார். என்றாலும், அரசர் வடிவேலுவுக்கு அமைச்சர் வடிவேலுவின் நடவடிக்கைகள் பிடித்துப் போனதால், தனிப்பட்ட முறையில் அவரைச் சந்திக்கிறார். அப்போது மற்ற எட்டு அமைச்சர்களின் போலித்தனங்களைச் சொல்கிறார் அமைச்சர் வடிவேலு.

உண்மையைப் புரிந்துகொண்ட அரசர் வடிவேலு, அமைச்சர் வடிவேலுவை தற்காலிக அரசராக்கிவிட்டு, வேறு நாட்டுக்கு சுற்றுலா செல்கிறேன் என மக்களை நம்பவைத்து, பத்து நாட்கள் மாறுவேடத்தில் நகரத்தில் உலாவர, மக்கள் படும் துயரங்கள் அனைத்தையும் தெரிந்துகொள்கிறார். இந்த பத்துநாளில் மற்ற எட்டு அமைச்சர்களும் சீன வியாபாரிகளோடு சேர்ந்து அரசரைக் கொல்லத் திட்டம் போடுகின்றனர். அவர்களின் திட்டத்தை முறியடிக்கிறார் அமைச்சரும் தற்காலி அரசருமான வடிவேலு. இப்படியாக கதை முடிந்துபோகிறது.

Thenaliraman 3

இனி விமர்சனத்திற்கு வருவோம்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு வடிவேலு படம் வந்திருப்பதால், நகைச்சுவையை மையப்படுத்தி வயிற்றைப் புண்ணாக்கும் காட்சிகளோடு கதையைச் சொல்லியிருப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பு திரையரங்குக்குள் நுழையும்போதே நமக்கு வந்துவிடுகிறது. அதுபோக, திரைப்படத்தின் சுவரொட்டிகளிலும், விளம்பரப் பதாகைகளிலும் காணப்படும் காட்சிகளும் அப்படியான கற்பனையை நமக்குள் ஊற்றெடுக்க வைத்துவிடுவதால், பரபரப்புடன் இருக்கையில் அமர்ந்து படத்தை பார்க்கத் தூண்டப்படுகிறோம். ஆனால்….

ஆனால், அடுத்த பத்து நிமிடங்களுக்குள் ஏமாற்றத்திற்கான முதல் அறிகுறி நம் முகத்தில் ஈயாட….அடுத்த பத்துநிமிடத்தில் சிரிக்க வைப்பார் வைப்பார் வைப்பார் வைப்பார் என நாம் ஒவ்வொரு நிமிடத்தையும் கழித்துக்கொண்டே இருக்க, இடைவேளை வந்து படமும் முடிந்துவிடுகிறது.

இம்சை அரசன் 23ம் புலிகேசியின் சாயல் தெனாலிராமனிலும் பல இடங்களில் வந்துபோகிறது. திரைக்கதை உத்தியும் அதே சாயல்தான். ஆனால், புலிகேசியில் இருந்த பாய்ச்சல் இங்கே காணப்படவில்லை. காரணம், புலிகேசியின் திரைக்கதை புதிதாக எழுதப்பட்டது. தெனாலிராமனின் திரைக்கதை பிரதி எடுக்கப்பட்டு சற்றே மாற்றி அமைக்கப்பட்டது.

வடிவேலுவின் பல படங்களில் வயிறு வலிக்கச் சிரிக்கும் குழந்தைகள் இந்தப் படத்தில் தூங்கிப் போகிறார்கள். காரணம், கதைக் களங்களை அமைத்த அளவிற்கு, கதையின் போக்கில் சுவராஸ்யத்தை உருவாக்கத் தவறிவிட்டார்கள்.

மகள், காதலி என இரண்டுவேடத்தில்  அரசர் வடிவேலுக்கும், அமைச்சர் வடிவேலுக்கும் ஒரே நாயகியாக மீனாட்சி தீட்சித். ஊறுகாய் தயாரிப்பில் பெரிதாக என்ன திறமைகாட்டிவிடமுடியும்? அதைத்தான் செய்திருக்கிறார் மீனாட்சி தீட்சீத்.

அந்நிய முதலீடு நாட்டிற்குள் நுழைவதால் உள்நாட்டு வணிகர்களும், மக்களும் எப்படிப் பாதிக்கப்படுகிறார்கள் என்பதுதான் கதையின் அடிநாதம். ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படத்திற்கான திரைக்கதையை அமைத்துவிட்டு, அதை நகைச்சுவை படமாக்க முயன்றிருப்பதால், முரண்பாடான கதைக்களத்தோடு ஒன்ற முடியாமல் சிதைந்துவிடுகின்றன காட்சி அமைப்புகள்.

பானைக்குள் யானை நுழைவது, எல்லாம் நன்மைக்கே போன்ற காட்சிகள் அரதப் பழசு இரகங்கள். அவற்றிற்குப் பதிலாக இன்றைய காலத்திற்கேற்ப மாற்று உத்திகளை யோசித்து திரைக்கதையாக்கியிருக்கலாம்.

திரைப்படங்கள் மிகச் சிறந்த காட்சி ஊடகங்கள். எழுத்தில் வடிக்க முடியாத பல அற்புதங்களை காட்சிவழியாக எளிதாகச் சொல்லிவிடமுடியும். அதனால்தான், மொக்கை ஜோக்குகளைகூட காட்சிவழியே சொல்லும்போது, விழுந்து விழுந்து சிரிப்பார்கள் பார்வையாளர்கள். அந்த வித்தையைக் மெத்தக் கற்ற வடிவேலு, தெனாலிராமனில் கோட்டைவிட்டிருப்பது, அவரது இயலாமையா, பலவீனமா, அறியாமையா அல்லது அகங்காரமா? அவருக்கே வெளிச்சம்.

படத்தின் இயக்குநர் யுவராஜ். இவரின் முந்தைய படம் ‘பட்டா பட்டி’. கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து, அத்தனை அற்புதமாக கதைசொல்லியிருப்பார். இந்தப் படத்தில் அவரின் திறமை மழுங்கடிக்கப்பட்டதற்கு, ‘’எனக்கு எல்லாம் தெரியும். நான் சொல்கிறபடி காட்சியை வை’’ என்ற வடிவேலுவின் அசட்டுத் தைரியமும் காரணமாக இருந்திருக்கலாம்.

படத்திற்கு நிறைய செலவிட்டிருக்கிறார்கள். நிறைய உழைத்திருக்கிறார்கள். யாருக்காக இதையெல்லாம் செய்கிறோம் என்பதையும் மனதில் நினைத்திருந்தால், தெனாலிராமன் புலிகேசியை தோற்கடித்திருப்பான். இங்கே, தோற்றுவிட்டான்.

மதிப்பெண்கள் 36%

tamil sample screenplay-tamil sample thiraikathai- நிறம் மாறும் முகங்கள் திரைக்கதை

நிறம் மாறும் முகங்கள்

கதை : ராஜேஷ்குமார்

திரைக்கதை, வசனம் : செ.பாலமுருகன்
 காட்சி 1/பகல்/வெளி

இருபது அடி அகலமுள்ள தெரு.
இருபுறமும் வீடுகள் நிறைந்த தெரு.
இருசக்கர வாகனத்தை குறைந்த வேகத்தில் ஓட்டிக்கொண்டு வருகிறாள் 27 வயது வாணி.
பின் இருக்கையில் வாணியின் மகன் 6 வயது சிறுவன், வாணியை கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறான்.
பள்ளிச் சீருடை அணிந்துள்ளான். முதுகில் புத்தகப் பை. பெயர் பிரசாத்.

தெருச் சாலையின் சிறு சிறு பள்ளங்களில் வாணியின் இருசக்கர வாகனம் குதித்து குதித்து வருகிறது.
பிரசாத்: “ம்ம்மா….முதுகு வலிக்குது….இன்னிக்கு நீ சரியாவே வண்டி ஓட்டல…குதிச்சி..குதிச்சி போவுது’’ (முகத்தில் வலி)

வாணி: ‘‘கொஞ்சம் பொறுத்துக்கோடா…..அஞ்சி நிமிஷந்தான்….வீட்டுக்கு போயிறலாம்…எந்தப் பாவி ரோட்டப் போட்டான்னே தெரியலை…ஒரு மழை பெய்யறதுக்குள்ள எல்லா ரோடும் பல்லைக் காட்டுது….பாவிப்பய நல்லாவே இருக்க மாட்டான்’’ (முனகல், ஆத்திரம்)

ஒரு வளைவில் திரும்புகிறது. தொடர்ந்து அதே வேகத்தில் வண்டி பயணிக்கிறது.

 

காட்சி 2/பகல்/வெளி

 

பிரதான சாலை. சுமாரான போக்குவரத்து.
மகிந்த்ரா வெள்ளை நிற ஸைலோ காரை 27 வயது இளைஞன் ஓட்டிக்கொண்டு வருகிறான்.
பெயர் ராமகிருஷ்ணன்.

ராமகிருஷ்ணனின் காருக்கு முன்னும் பின்னுமாக பல வாகனங்கள் சீரான வேகத்தில் சென்றுகொண்டிருக்கின்றன.
ராமகிருஷ்ணனின் பார்வை சாலையை கூர்ந்து கவனித்தபடி இருக்கிறது.
ஒரு சிக்னலில் கார் நிற்கிறது.
ராமகிருஷ்ணனின் பார்வை சிக்னலில் எரியும் சிகப்பு நிற விளக்கையே பார்த்துக் கொண்டிருக்கிறது.
சட்டைப் பையில் இருந்து இடது கையால் ஒரு பபுள்கம்மை எடுக்கிறான்.
வலது கையால் பபுள்கம் மேலுள்ள கவரை பிரித்து, வாயில் போட்டு சுவைக்கிறான்.
சிக்னலில் பச்சை விளக்கு எரிய, ராமகிருஷ்ணன் கியரை இயக்கி வண்டியை தொடர்ந்து ஓட்டுகிறான்.
கார் பிரதான சாலையைவிட்டு உட்புற சாலைக்குள் நுழைகிறது.

      கட்

வாணி இன்னொரு தெருவுக்குள் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருக்கிறாள்.

      கட்

அதே தெருவின் எதிர்புறத்தில் ராமகிருஷ்ணன் கார் ஓட்டிக்கொண்டு வருகிறான்.
காருக்கு இருபது மீட்டர் முன்னே வயதான தாத்தா ஒருவர் சைக்கிள் ஓட்டிக்கொண்டு போகிறார்.
சாலையில் உள்ள ஒரு பள்ளத்தில் சைக்கிள் ஏறி, இறங்கும்போது தாத்தா பேலன்ஸ் செய்ய முடியாமல் கீழே விழுகிறார்.
கார் ஓட்டிக்கொண்டு வரும் ராமகிருஷ்ணன் அதைப் பார்க்கிறான்.
முகத்தில் வருத்தம். கண்களில் பரிதாபம்.
சைக்கிளோடு விழுந்துகிடக்கும் தாத்தாவுக்கு அருகில் கார் நிறுத்தப்படுகிறது.
ராமகிருஷ்ணன் அவசரமாக காரிலிருந்து இறங்குகிறான்.
விழுந்துகிடக்கும் தாத்தாவை தூக்கி விடுகிறான்.

 

ராமகிருஷ்ணன்: ‘‘என்ன தாத்தா…பாத்து வரக்கூடாதா…அடி எதும் படலியே’’

 

தாத்தா ராமகிருஷ்ணனின் உதவியோடு எழுந்துகொள்கிறார்.
தாத்தா: ‘‘ரொம்ப நன்றி தம்பி….’’
ராமகிருஷ்ணன் தாத்தாவின் சட்டையில் ஒட்டியிருக்கும் அழுக்கை தன் கையால் துடைத்து விடுகிறான்.
அவன் துடைத்து விடுவதை தாத்தா பாசத்தோடு பார்க்கிறார்.
தாத்தா: ‘‘பரவால்ல தம்பி…நீங்க நல்லாயிருக்கணும்…பாத்தா பெரிய இடத்து புள்ளை மாதிரி இருக்கீங்க…உங்கள மாதிரி ஆளுங்க ஒரு சில பேராவது இன்னும் இருக்கறதாலதான் நாட்டுல மழை பெய்யுது…’’

ராமகிருஷ்ணன்: ‘‘அப்போ….மழையால ரோடெல்லாம் பள்ளமாவுறது எங்கள மாதிரி ஆளுங்கலாலத்தான்னு சொல்ல வர்றீங்க…’’
சொல்லிவிட்டு மெலிதாகச் சிரித்துக் கொள்கிறான்.
தாத்தா ராமகிருஷ்ணனின் முகத்தை வருத்தத்தோடு ஏறிட்டுப் பார்க்கிறார்.
தாத்தாவின் முகத்தை ராமகிருஷ்ணன் கவனிக்கிறான்.

ராமகிருஷ்ணன்: ‘‘சும்மா ஜோக்கடிச்சேன்…அதுக்குப்போயி இப்படி வருத்தப்படறீங்களே…’’

தாத்தா ராமகிருஷ்ணனின் முகத்தைப் பார்க்கிறார்.
மெலிதாகப் புன்னகைக்கிறார்.
தாத்தா: ‘‘இடுக்கண் வருங்கால் நகுகன்னு சொல்றீங்க…சரிதான்ன….நான் சொல்றது’’

ராமகிருஷ்ணன்: ‘‘ஐய்யோ….திருக்குறள்லாம் சொல்றீங்க….ஒரு வேளை போன பிறவியில திருவள்ளுவராப் பிறந்திருப்பீங்களோ…’’

 தாத்தா: ‘‘துன்பம் வரும் வேளையில சிரிங்க…’’

 ராமகிருஷ்ணன்: ‘‘அப்டீன்னா கண்ணதாசனா’’    

இருவரும் சேர்ந்து சிரிக்கின்றனர்.
தொடர்ந்து சிரிக்கின்றனர்.

அவர்களுக்கு எதிர்புறமாக இருசக்கர வாகனத்தை ஓட்டிவரும் வாணி இதைக் கவனிக்கிறாள்.
வாணியின் பார்வை ராமகிருஷ்ணனை பார்த்து ஆச்சரியமாகிறது.
வாணி இப்போது ராமகிருஷ்ணனை கூர்ந்து பார்க்கிறாள்.
வண்டியை மெதுவாக ராமகிருஷ்ணன் காருக்கு அருகில் நிறுத்துகிறாள்.
ராமகிருஷ்ணனும் தாத்தாவும் தங்களுக்கு அருகில் வண்டியை நிறுத்திவிட்டு  பார்க்கின்ற வாணியையும், அவளுக்குப் பின்புறம் அமர்ந்திருக்கும் சிறுவனையும் பார்க்கின்றனர்.
வாணி இப்போது ராமகிருஷ்ணனை கூர்ந்து பார்க்கிறாள்.
அவளின் பார்வை ராமகிருஷ்ணனின் முகத்தில் ஒருவித மாற்றத்தை வரவழைக்கிறது.
ராமகிருஷ்ணன்: ‘‘என்னங்க…அப்டீ பாக்கறீங்க?’’

வாணி: ‘‘நீங்க…ராமகிருஷ்ணந்தான?’’ (யோசித்தபடியே..தயக்கத்துடன்)

வாணி இப்படிக் கேட்டதும் ராமகிருஷ்ணன் முகத்தில் கூடுதல் மாற்றம் தெரிகிறது.
பதில் ஏதும் சொல்லாமல் மௌனமாக இருக்கிறான்.

வாணி: ‘‘நீங்க ராமகிருஷ்ணந்தான?’’

ராமகிருஷ்ணன் முகத்தில் இப்போது வியப்பு.
அருகில் நிற்கும் தாத்தா வாணியையும் ராமகிருஷ்ணனையும் மாறி மாறி பார்க்கிறார்.
ராமகிருஷ்ணன்: ‘‘ஆமா…நீங்க யாருன்னு தெரியலையே…’’

வாணியின் முகத்தில் மெலிதான நக்கல் சிரிப்பு வருகிறது.

வாணி: ‘‘அடப்பாவி…என்னை தெரியலையா…’’

ராமகிருஷ்ணன்: ‘‘ஏங்க….தெரியாமத்தான நீங்க யாருன்னு கேக்கறேன்..’’

வாணி: ‘‘நல்லா பாரு…நான் யாருன்னு தெரியும்…தெரியலைன்னா நீ வேஸ்ட்….’’

ராமகிருஷ்ணனின் முகத்தில் எரிச்சல்

ராமகிருஷ்ணன்: ‘‘எங்க தொகுதி எம்.எல்.ஏ பொண்டாட்டியா…’’  (நக்கல்)

வாணி மெதுவாகச் சிரித்துக் கொண்டே…

வாணி: ‘‘மண்ணாங்கட்டி….டேய் உங்கூட ஆறாவதுல  இருந்து பத்தாம் வகுப்பு வரைக்கும் பல்லாவரம் கவர்மென்ட் ஸ்கூல்ல ஒன்னா படிச்சேன்ன …..மறந்துட்டியா….’’

ராமகிருஷ்ணன் மெதுவாக தலையை சொறிந்துகொள்கிறான்.
வானம் பார்த்து யோசிக்கிறான்.
மூக்கை தடவிக் கொள்கிறான்.
இவர்களின் செய்கையை தாத்தா பார்க்கிறார்.

தாத்தா: ‘‘தம்பி நான் கௌம்புறேன்…உங்களுக்கு சனி திசை ஆரம்பம் ஆகறமாதிரி இருக்கு…’’
தாத்தா சொல்லிவிட்டு ராமகிருஷ்ணனின் பதிலை எதிர்பார்க்காமல் சைக்கிளில் ஏறி கிளம்புகிறார்.
ராமகிருஷ்ணன் தாத்தா புறப்பட்டு போவதை ஒருமுறை பார்த்துவிட்டு, வாணியின் முகத்தை ஏறிட்டுப் பார்க்கிறான்.

ராமகிருஷ்ணன்: ”ம்ம்…….வாணி…….’’ (யோசனை மற்றும் தயக்கம்)

வாணி: ‘‘அப்பாடி……இப்பவாவது ஞாபகம் வந்திச்சே….’’

ராமகிருஷ்ணன் வாணியின் வண்டியின் பின்னால் கவலையோடு அமர்ந்திருக்கும் சிறுவனைப் பார்க்கிறான்.
அதை வாணி கவனிக்கிறாள்…

வாணி: ‘‘என்னோட மகன்….மீனாட்சி  மெட்ரிகுலேஷன் ஸ்கூல்ல ஒன்னாவது படிக்கிறான்….’’
சிறுவன் பிரசாத் ராமகிருஷ்ணனை ஏறிட்டுப் பார்க்கிறான்.
ராமகிருஷ்ணன் சிறுவன் பிரசாத்தின்  அருகில் வந்து அவன் முகத்தை கையால் தடவியபடியே வாணியிடம் பேசுகிறான்..

ராமகிருஷ்ணன்: ‘‘பாத்து பனிரெண்டு வருஷம்…..ஆளே மாறிட்ட வாணி……அப்போ ஒல்லியா இருப்பே…இப்போ கொஞ்சம் சதை போட்டு….முகம்லாம் வேறமாதிரி ஆயிருச்சா…உடனே ஞாபகத்துக்கு வரலே….’’

வாணி அவன் பேசுவதை கவனிக்கிறாள்…

ராமகிருஷ்ணன்: ‘‘கல்யாணம் எப்போ ஆச்சி….?’’

வாணி: ‘‘ஏழு வருஷம் முடிஞ்சிருச்சி…அதுக்கு அத்தாட்சியாத்தான் இவரு….பேரு…பிரசாத்’’
பின்னால் அமர்ந்திருக்கும் தன் மகனை தலையை அசைத்து ஜாடை காட்டி பேசுகிறாள்.

ராமகிருஷ்ணன்: ‘‘உன்னோட….அவர் என்ன பண்றார்….?’’

வாணி: ‘‘க்ரைம் இன்ஸ்பெக்டர்….’’

வாணி சொன்னதைக் கேட்டு ராமகிருஷ்ணன் மெலிதாகச் சிரிக்கிறான்.

வாணி: ‘‘ஏன்டா சிரிக்கறே….?’

ராமகிருஷ்ணன்: ’’இல்லே…சின்ன வயசுல போலீஸ்னாலயே ஓடி ஒளிஞ்சுக்குவே….இப்போ போலீஸ்காரருக்கே பொண்டாட்டியா ஆயிட்டியே…அதான்…’’

வாணி: ‘‘என்ன பண்றது…ஆனா என்னப் பாத்து இப்போ அவருதான் பயப்படாரு…’’

சொல்லிவிட்டு வாணி சிரித்துக் கொள்கிறாள்.

ராமகிருஷ்ணன்: ‘‘வீடு இந்தப் பக்கம்தானா…?’’
வாணி: ‘‘ஆமா…அடுத்த தெருதான்….’’

சில நொடிகள் யோசிக்கிறாள்…

வாணி: ‘‘சரி…நான் பாட்டுக்கு பேசிட்டே இருக்கேன்…உனக்கு கல்யாணம் ஆயிருச்சா…?’’

ராமகிருஷ்ணன் இல்லை என்பதுபோல் தலையாட்டுகிறான்.

வாணி: ‘‘கார்லாம் வச்சிருக்கே…ரொம்ப வசதியாயிட்டேன்னு நினைக்கிறேன்….’’

ராமகிருஷ்ணன்: ‘‘பிஸ்னெஸ் பண்றேன்…அண்ணங்கூட சேர்ந்து….சுமாரான வசதிதான்…’’

   கட்

அதே தெருவில் சற்று தூரத்தில் ஆட்டோ ஒன்று வந்துகொண்டிருக்கிறது.
ஆட்டோவுக்குள் வாணியின் வயதுடைய ஒரு பெண் கண்களைக் கசக்கியபடியே அமர்ந்திருக்கிறாள். பெயர் சந்திரா.
முந்தானையால் முகத்தைத் துடைத்துக் கொள்கிறாள்.
ஆட்டோ ஓட்டுபவர், ஆட்டோவின் கண்ணாடி வழியே பின்னாடி அமர்ந்திருக்கும் பெண் கண்களைத் துடைத்து விடுவதை பார்க்கிறார்.

ஆட்டோ ஓட்டுபவர்: ‘‘மேடம்……எதுவும் நடந்திருக்காது…தேவையில்லாம மனசப் போட்டு குழப்பிக்காதீங்க…’’

சந்திரா ஆட்டோ ஓட்டுநரைப் பார்க்கிறார்.
கண்களைத் துடைத்துக் கொள்கிறாள்.
ஆட்டோ தொடர்ந்து பயணிக்கிறது.

      கட்

வாணி இப்போது டூ வீலரிலிருந்தி இறங்கி நின்றுகொண்டு ராமகிருஷ்ணனிடம் பேசிக்கொண்டிருக்கிறாள்.

வாணி: ‘‘வீடு….?’’

ராமகிருஷ்ணன்: ‘‘அனகாபுத்தூர்ல….’’

தூரத்தில் வந்துகொண்டிருந்த ஆட்டோ இவர்களைக் கடந்து செல்லும்போது…. ஆட்டோவினுள் அமர்ந்திருக்கும் சந்திரா வாணியைப் பார்க்கிறாள்…

சந்திரா: ‘‘நிப்பாட்டுங்க….நிப்பாட்டுங்க’’

சந்திரா சொல்லவும் ஆட்டோ ஓட்டும் நபர் ஆட்டோவை நிறுத்துகிறார்.
தங்களுக்கு அருகே திடீரென்று ஆட்டோ நிற்பதை வாணியும், ராமகிருஷ்ணனும் கவனிக்கின்றனர்.
ஆட்டோவிலிருந்து சந்திரா அழுது வடியும் முகத்துடன் இறங்குகிறாள்.
சந்திரா அழுதுகொண்டே இறங்குவதை வாணி பார்க்கிறாள்.
வாணியின் முகத்தில் ரியாக்ஷன்.
ராமகிருஷ்ணன் சந்திராவைப் பார்க்கிறான்.
சந்திரா வாணியை நோக்கி அழுதபடியே நடந்து வருகிறாள்.

வாணி: ‘‘என்னாச்சி சந்திரா…?’’ 

சந்திரா: ‘‘வாணி….என் மகனைப் பாத்தியா……அவனைக் காணோம்…..’’ (பயம், சோகம்)

வாணி: ‘‘என்ன சொல்ற….?’’ (பதட்டம்)

சந்திரா: ‘‘ஆட்டோக்காரர் கொஞ்சம் லேட்டா வந்தாரு…எல்லாப் பசங்களும் ஸ்கூல் விட்டு வந்துட்டிருந்தாங்க…நீ கூட உன் மகனை கூட்டிட்டு வந்ததை பாத்தேன்…பத்து நிமிஷந்தான் லேட்டு… உள்ள போய் பாத்தேன்…வழக்கமா நிக்கற இடத்துல என் மகன் கணேஷ் இல்ல….ஸ்கூல் ஃபுல்லா நல்லாத் தேடிப்பாத்துட்டேன்…அங்க   எங்கேயும் இல்ல….வாட்ச்மேன்கிட்ட கேட்டதுக்கு…உங்க மகன் வெளியில போனத பாத்தேன்னு சொல்றாரு…எனக்கு பயமா இருக்குடி…’’

ராமகிருஷ்ணன்: ‘‘என்ன படிக்கறான்….’’

ராமகிருஷ்ணன் சந்திராவிடம் கேட்கிறான். அதற்கு வாணி பதில் சொல்கிறாள்.

வாணி: ‘‘எம் பையனும் இவங்க பையனும் ஒரே வகுப்புதான்..எங்க வீட்டுக்கு பக்கத்து வீட்டுலதான் இவங்க இருக்காங்க’’

ராமகிருஷ்ணன்: ‘‘ஒரு வேளை நீங்க வர்றதுக்கு லேட்டாயிருச்சுன்னு அவனே கௌம்பி போயிருக்கலாம் இல்லியா…அந்தக் கோணத்துலேயும் யோசியுங்க… பதட்டப்படாதீங்க…உடனே வீட்டுக்கு கௌம்பிப் போங்க…உங்க மகன் அங்க இருப்பான்…’’

சந்திரா: ‘‘வீட்டுல மாமியார் இருக்காங்க…போன் பண்ணி கேட்டுட்டேன்…இன்னும் வரலைங்கறாங்க… எனக்கு பயமா இருக்கு…’’ (அழுகிறாள்….)…அய்யோ கடவுளே… எம் புள்ளை என்ன ஆனான்னு தெரியலையே…’’ (ராமகிருஷ்ணனிடம் சொல்கிறாள்) 

வாணி: ‘‘அழுகைய நிறுத்து சந்திரா…சீக்கிரம் கௌம்பு….நானும் வர்றேன்…மொதல்ல வீட்டுக்கு போய் பாப்போம்….’’

ராமகிருஷ்ணனை பார்க்கிறாள் வாணி…

வாணி: ‘‘நான் வர்றேன் ராமு…இன்னொரு நாளைக்கு பாக்கலாம்…அடுத்த தெருவுல 13ம் நம்பர் வீடுதான் என்னோடது….கேட்ல வனராஜன் இன்ஸ்பெக்டர்ன்னு போர்டு தொங்கும்…..’’ (அவசரப் பேச்சு)

 

ராமகிருஷ்ணன்: ‘‘என்னோட ஹெல்ப் எதாச்சும் வேணுமா..?

வாணி: ‘‘பரவாயில்ல….நாங்க பாத்துக்கறோம்….தவறா எதும் நடந்துருக்காது…..’’

ராமகிருஷ்ணன்: ‘‘சரி….அவசரப்படாம போங்க…ஒன்னும் ஆயிருக்காது….’’
சந்திரா ஆட்டோவில் ஏறிக்கொள்கிறாள்…
ஆட்டோவை ஸ்டார்ட் செய்கிறார் ஓட்டுநர்…
ஆட்டோ புறப்பட்டுச் செல்ல…அதன் பின்னாடியே வாணி தனது இருசக்கர வாகனத்தை ஓட்டிக் கொண்டு செல்கிறாள்.
அவர்கள் புறப்பட்டுச் செல்வதையே ராமகிருஷ்ணன் பார்க்கிறான்.

தூரத்தில் செல்லும் ஆட்டோவும்…டூ வீலரில் செல்லும் வாணியும் இடது பக்கமாகத் திரும்பி மறைவதை ராமகிருஷ்ணன் பார்க்கிறான்…

ராமகிருஷ்ணன்:  (மைன்ட் வாய்ஸ்) ‘‘காலம் கெட்டுப் போச்சி….இஷ்டத்துக்கு குழந்தைங்க காணாமப் போறாங்க….கவர்மென்ட்ல ஆளுங்க என்ன பண்றாங்கன்னே தெரியலை…..’’

கார் கதவைத் திறக்கிறான். இருக்கையில் அமர்கிறான். கதவை மூடிக்கொள்கிறான். சுற்று முற்றும் பார்க்கிறான். இப்போது அவன் பார்வையில் வில்லத்தனம் தெரிகிறது. சட்டைப் பையிலிருந்து ஒரு பபுள்கம் எடுத்து, அதன் கவரைப் பிரித்து வாயில் போட்டு மென்னுகிறான்.

 

தன் இருக்கையில் அமர்ந்தபடியே பின் இருக்கைக்குக் கீழே எட்டிப் பார்க்கிறான்.
பின் இருக்கையில் வாயில் பிளாஸ்திரியோடு, மயங்கிய நிலையில் ஆறுவயதுச் சிறுவன் கிடக்கிறான்.

அந்தச் சிறுவனின் முகம் க்ளோசப் காட்சியாக. சிறுவன் பள்ளிச் சீருடையில் இருக்கிறான். சிறுவனின் கழுத்தில் அடையாள அட்டை தொங்கிடப்பட்டிருக்கிறது. அதில்  கணேஷ், பர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் பி செக்ஷன் மீனாட்சி மெட்குலேசன் ஸ்கூல் என்கிற எழுத்துகள் தெளிவாக இருக்கின்றன.

ராமகிருஷ்ணன் சிறுவனைப் பார்த்து மெலிதாகப் புன்னகைத்தபடியே காரை ஸ்டார்ட் செய்கிறான். கார் புறப்பட்டுச் செல்கிறது.

 

Thanks for reading tamil thiraikathai

Thankyou for reading tamil screenplay

தமிழ்நாட்டின் 234 சட்டமன்ற தொகுதிகளின் விபரம்

தமிழ்நாட்டின்

234 சட்டமன்ற தொகுதிகளின் விபரம்

1.     கும்மிடிப்பூண்டி (சட்டமன்றத் தொகுதி)     திருவள்ளூர்
2.     பொன்னேரி (சட்டமன்றத் தொகுதி)     திருவள்ளூர்
3.     திருத்தணி (சட்டமன்றத் தொகுதி)     திருவள்ளூர்
4.     திருவள்ளூர் (சட்டமன்றத் தொகுதி)     திருவள்ளூர்
5.     பூந்தமல்லி (சட்டமன்றத் தொகுதி)     திருவள்ளூர்
6.     ஆவடி (சட்டமன்றத் தொகுதி)     திருவள்ளூர்
7.     மதுரவாயல் (சட்டமன்றத் தொகுதி)     திருவள்ளூர்
8.     அம்பத்தூர் (சட்டமன்றத் தொகுதி)     திருவள்ளூர்
9.     மாதவரம் (சட்டமன்றத் தொகுதி)     திருவள்ளூர்
10.     திருவொற்றியூர் (சட்டமன்றத் தொகுதி)     திருவள்ளூர்
11.     ராதாகிருஷ்ணன் நகர் (சட்டமன்றத் தொகுதி)     திருவள்ளூர்
12.     பெரம்பூர் (சட்டமன்றத் தொகுதி)     சென்னை
13.     கொளத்தூர் (புதுக்கோட்டை) (சட்டமன்றத் தொகுதி)     சென்னை
14.     வில்லிவாக்கம் (சட்டமன்றத் தொகுதி)     சென்னை
15.     திரு.வி.க நகர் (சட்டமன்றத் தொகுதி)     சென்னை
16.     எழும்பூர் (சட்டமன்றத் தொகுதி)     சென்னை
17.     இராயபுரம் (சட்டமன்றத் தொகுதி)     சென்னை
18.     துறைமுகம் சட்டமன்றத் தொகுதி     சென்னை
19.     சேப்பாக்கம் (சட்டமன்றத் தொகுதி)     சென்னை
20.     ஆயிரம் விளக்கு (சட்டமன்றத் தொகுதி)     சென்னை
21.     அண்ணா நகர் (சட்டமன்றத் தொகுதி)     சென்னை
22.     விருகம்பாக்கம் (சட்டமன்றத் தொகுதி)     சென்னை
23.     சைதாப்பேட்டை (சட்டமன்றத் தொகுதி)     சென்னை
24.     தியாகராய நகர் (சட்டமன்றத் தொகுதி)     சென்னை
25.     மயிலாப்பூர் (சட்டமன்றத் தொகுதி)     சென்னை
26.     வேளச்சேரி (சட்டமன்றத் தொகுதி)     காஞ்சிபுரம்
27.     சோளிங்கநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)     காஞ்சிபுரம்
28.     ஆலந்தூர் (சட்டமன்றத் தொகுதி)     காஞ்சிபுரம்
29.     திருப்பெரும்புதூர் (சட்டமன்றத் தொகுதி)     காஞ்சிபுரம்
30.     பல்லாவரம் (சட்டமன்றத் தொகுதி)     காஞ்சிபுரம்
31.     தாம்பரம் (சட்டமன்றத் தொகுதி)     காஞ்சிபுரம்
32.     செங்கல்பட்டு (சட்டமன்றத் தொகுதி)     காஞ்சிபுரம்
33.     திருப்போரூர் (சட்டமன்றத் தொகுதி)     காஞ்சிபுரம்
34.     செய்யூர் (சட்டமன்றத் தொகுதி)     காஞ்சிபுரம்
35.     மதுராந்தகம் (சட்டமன்றத் தொகுதி)     காஞ்சிபுரம்
36.     உத்திரமேரூர் (சட்டமன்றத் தொகுதி)     காஞ்சிபுரம்
37.     காஞ்சிபுரம் (சட்டமன்றத் தொகுதி)     காஞ்சிபுரம்
38.     அரக்கோணம் (சட்டமன்றத் தொகுதி)     வேலூர்
39.     சோளிங்கர் (சட்டமன்றத் தொகுதி)     வேலூர்
40.     காட்பாடி (சட்டமன்றத் தொகுதி)     வேலூர்
41.     ராணிப்பேட்டை (சட்டமன்றத் தொகுதி)     வேலூர்
42.     ஆற்காடு (சட்டமன்றத் தொகுதி)     வேலூர்
43.     வேலூர் (சட்டமன்றத் தொகுதி)     வேலூர்
44.     அணைக்கட்டு (சட்டமன்றத் தொகுதி)     வேலூர்
45.     கீழ்வைத்தனன் குப்பம் (சட்டமன்றத் தொகுதி)     வேலூர்
46.     குடியாத்தம் (சட்டமன்றத் தொகுதி)     வேலூர்
47.     வாணியம்பாடி (சட்டமன்றத் தொகுதி)     வேலூர்
48.     ஆம்பூர் (சட்டமன்றத் தொகுதி)     வேலூர்
49.     ஜோலார்பேட்டை (சட்டமன்றத் தொகுதி)     வேலூர்
50.     திருப்பத்தூர் (சட்டமன்றத் தொகுதி)     வேலூர்
51.     ஊத்தங்கரை (சட்டமன்றத் தொகுதி)     கிருஷ்ணகிரி
52.     பர்கூர் (சட்டமன்றத் தொகுதி)     கிருஷ்ணகிரி
53.     கிருஷ்ணகிரி (சட்டமன்றத் தொகுதி)     கிருஷ்ணகிரி
54.     வேப்பனஹள்ளி (சட்டமன்றத் தொகுதி)     கிருஷ்ணகிரி
55.     ஓசூர் (சட்டமன்றத் தொகுதி)     கிருஷ்ணகிரி
56.     தளி (சட்டமன்றத் தொகுதி)     கிருஷ்ணகிரி
57.     பாலக்கோடு (சட்டமன்றத் தொகுதி)     தர்மபுரி
58.     பெண்ணாகரம் (சட்டமன்றத் தொகுதி)     தர்மபுரி
59.     தர்மபுரி (சட்டமன்றத் தொகுதி)     தர்மபுரி
60.     பாப்பிரெட்டிப்பட்டி (சட்டமன்றத் தொகுதி)     தர்மபுரி
61.     அரூர் (சட்டமன்றத் தொகுதி)     தர்மபுரி
62.     செங்கம் (சட்டமன்றத் தொகுதி)     திருவண்ணாமலை
63.     திருவண்ணாமலை (சட்டமன்றத் தொகுதி)     திருவண்ணாமலை
64.     கீழ்பெண்ணாத்தூர் (சட்டமன்றத் தொகுதி)‎     திருவண்ணாமலை
65.     கலசப்பாக்கம் (சட்டமன்றத் தொகுதி)     திருவண்ணாமலை
66.     போளூர் (சட்டமன்றத் தொகுதி)     திருவண்ணாமலை
67.     ஆரணி (சட்டமன்றத் தொகுதி)     திருவண்ணாமலை
68.     செய்யாறு (சட்டமன்றத் தொகுதி)     திருவண்ணாமலை
69.     வந்தவாசி (சட்டமன்றத் தொகுதி)     திருவண்ணாமலை
70.     செஞ்சி (சட்டமன்றத் தொகுதி)     விழுப்புரம்
71.     மயிலம் (சட்டமன்றத் தொகுதி)     விழுப்புரம்
72.     திண்டிவனம் (சட்டமன்றத் தொகுதி)     விழுப்புரம்
73.     வானூர் (சட்டமன்றத் தொகுதி)     விழுப்புரம்
74.     விழுப்புரம் (சட்டமன்றத் தொகுதி)     விழுப்புரம்
75.     விக்கிரவாண்டி (சட்டமன்றத் தொகுதி)     விழுப்புரம்
76.     திருக்கோயிலூர் (சட்டமன்றத் தொகுதி)     விழுப்புரம்
77.     உளுந்தூர்ப்பேட்டை (சட்டமன்றத் தொகுதி)     விழுப்புரம்
78.     இரிஷிவந்தியம் (சட்டமன்றத் தொகுதி)     விழுப்புரம்
79.     சங்கராபுரம் (சட்டமன்றத் தொகுதி)     விழுப்புரம்
80.     கள்ளக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)     விழுப்புரம்
81.     கங்கவள்ளி (சட்டமன்றத் தொகுதி)     சேலம்
82.     ஆத்தூர் – சேலம் (சட்டமன்றத் தொகுதி)     சேலம்
83.     ஏற்காடு (சட்டமன்றத் தொகுதி)     சேலம்
84.     ஓமலூர் (சட்டமன்றத் தொகுதி)     சேலம்
85.     மேட்டூர் (சட்டமன்றத் தொகுதி)     சேலம்
86.     எடப்பாடி (சட்டமன்றத் தொகுதி)     சேலம்
87.     சங்ககிரி (சட்டமன்றத் தொகுதி)     சேலம்
88.     சேலம்-மேற்கு (சட்டமன்றத் தொகுதி)     சேலம்
89.     சேலம்-வடக்கு (சட்டமன்றத் தொகுதி)     சேலம்
90.     சேலம்-தெற்கு (சட்டமன்றத் தொகுதி)     சேலம்
91.     வீரபாண்டி (சட்டமன்றத் தொகுதி)     சேலம்
92.     இராசிபுரம் (சட்டமன்றத் தொகுதி)     நாமக்கல்
93.     சேந்தமங்கலம் (சட்டமன்றத் தொகுதி)     நாமக்கல்
94.     நாமக்கல் (சட்டமன்றத் தொகுதி)     நாமக்கல்
95.     பரமத்தி-வேலூர் (சட்டமன்றத் தொகுதி)     நாமக்கல்
96.     திருச்செங்கோடு (சட்டமன்றத் தொகுதி)     நாமக்கல்
97.     குமாரபாளையம் (சட்டமன்றத் தொகுதி)     நாமக்கல்
98.     ஈரோடு கிழக்கு (சட்டமன்றத் தொகுதி)     ஈரோடு
99.     ஈரோடு மேற்கு (சட்டமன்றத் தொகுதி)     ஈரோடு
100.     மொடக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)     ஈரோடு
101.     பெருந்துறை (சட்டமன்றத் தொகுதி)     ஈரோடு
102.     பவானி (சட்டமன்றத் தொகுதி)     ஈரோடு
103.     அந்தியூர் (சட்டமன்றத் தொகுதி)     ஈரோடு
104.     கோபிச்செட்டிப்பாளையம் (சட்டமன்றத் தொகுதி)     ஈரோடு
105.     பவானிசாகர் (சட்டமன்றத் தொகுதி)     ஈரோடு
106.     தாராபுரம் (சட்டமன்றத் தொகுதி)     திருப்பூர்
107.     காங்கேயம் (சட்டமன்றத் தொகுதி)     திருப்பூர்
108.     அவினாசி (சட்டமன்றத் தொகுதி)     திருப்பூர்
109.     திருப்பூர் வடக்கு (சட்டமன்றத் தொகுதி)     திருப்பூர்
110.     திருப்பூர் தெற்கு (சட்டமன்றத் தொகுதி)     திருப்பூர்
111.     பல்லடம் (சட்டமன்றத் தொகுதி)     திருப்பூர்
112.     உடுமலைப்பேட்டை (சட்டமன்றத் தொகுதி)     திருப்பூர்
113.     மடத்துக்குளம் (சட்டமன்றத் தொகுதி)     திருப்பூர்
114.     உதகமண்டலம் (சட்டமன்றத் தொகுதி)     நீலகிரி மாவட்டம்
115.     கூடலூர் (சட்டமன்றத் தொகுதி)     நீலகிரி மாவட்டம்
116.     குன்னூர் (சட்டமன்றத் தொகுதி)     நீலகிரி மாவட்டம்
117.     மேட்டுப்பாளையம் (சட்டமன்றத் தொகுதி)     கோயம்புத்தூர்
118.     சூலூர் (சட்டமன்றத் தொகுதி)     கோயம்புத்தூர்
119.     கவுண்டம்பாளையம் (சட்டமன்றத் தொகுதி)     கோயம்புத்தூர்
120.     கோயம்புத்தூர் வடக்கு (சட்டமன்றத் தொகுதி)     கோயம்புத்தூர்
121.     தொண்டாமுத்தூர் (சட்டமன்றத் தொகுதி)     கோயம்புத்தூர்
122.     கோயம்புத்தூர் தெற்கு (சட்டமன்றத் தொகுதி)     கோயம்புத்தூர்
123.     சிங்காநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)     கோயம்புத்தூர்
124.     கிணத்துக்கடவு (சட்டமன்றத் தொகுதி)     கோயம்புத்தூர்
125.     பொள்ளாச்சி (சட்டமன்றத் தொகுதி)     கோயம்புத்தூர்
126.     வால்பாறை (சட்டமன்றத் தொகுதி)     கோயம்புத்தூர்
127.     பழநி (சட்டமன்றத் தொகுதி)     திண்டுக்கல்
128.     ஒட்டன்சத்திரம் (சட்டமன்றத் தொகுதி)     திண்டுக்கல்
129.     ஆத்தூர் – திண்டுக்கல் (சட்டமன்றத் தொகுதி)     திண்டுக்கல்
130.     நிலக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி)     திண்டுக்கல்
131.     நத்தம் (சட்டமன்றத் தொகுதி)     திண்டுக்கல்
132.     திண்டுக்கல் (சட்டமன்றத் தொகுதி)     திண்டுக்கல்
133.     வேடசந்தூர் (சட்டமன்றத் தொகுதி)     திண்டுக்கல்
134.     அரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)     கரூர்
135.     கரூர் (சட்டமன்றத் தொகுதி)     கரூர்
136.     கிருஷ்ணராயபுரம் (சட்டமன்றத் தொகுதி)     கரூர்
137.     குளித்தலை (சட்டமன்றத் தொகுதி)     கரூர்
138.     மணப்பாறை (சட்டமன்றத் தொகுதி)     திருச்சிராப்பள்ளி
139.     ஸ்ரீரங்கம் (சட்டமன்றத் தொகுதி)     திருச்சிராப்பள்ளி
140.     திருச்சிராப்பள்ளி மேற்கு (சட்டமன்றத் தொகுதி)     திருச்சிராப்பள்ளி
141.     திருச்சிராப்பள்ளி கிழக்கு (சட்டமன்றத் தொகுதி)     திருச்சிராப்பள்ளி
142.     திருவெறும்பூர் (சட்டமன்றத் தொகுதி)     திருச்சிராப்பள்ளி
143.     இலால்குடி (சட்டமன்றத் தொகுதி)     திருச்சிராப்பள்ளி
144.     மண்ணச்சநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)     திருச்சிராப்பள்ளி
145.     முசிறி (சட்டமன்றத் தொகுதி)     திருச்சிராப்பள்ளி
146.     துறையூர் (சட்டமன்றத் தொகுதி)     திருச்சிராப்பள்ளி
147.     பெரம்பலூர் (சட்டமன்றத் தொகுதி)     பெரம்பலூர்
148.     குன்னம் (சட்டமன்றத் தொகுதி)     பெரம்பலூர்
149.     அரியலூர் (சட்டமன்றத் தொகுதி)     அரியலூர்
150.     ஜெயங்கொண்டம் (சட்டமன்றத் தொகுதி)     அரியலூர்
151.     திட்டக்குடி (சட்டமன்றத் தொகுதி)     கடலூர்
152.     விருத்தாச்சலம் (சட்டமன்றத் தொகுதி)     கடலூர்
153.     நெய்வேலி (சட்டமன்றத் தொகுதி)     கடலூர்
154.     பண்ருட்டி (சட்டமன்றத் தொகுதி)     கடலூர்
155.     கடலூர் (சட்டமன்றத் தொகுதி)     கடலூர்
156.     குறிஞ்சிப்பாடி (சட்டமன்றத் தொகுதி)     கடலூர்
157.     புவனகிரி (சட்டமன்றத் தொகுதி)     கடலூர்
158.     சிதம்பரம் (சட்டமன்றத் தொகுதி)     கடலூர்
159.     காட்டுமன்னார்கோயில் (சட்டமன்றத் தொகுதி)     கடலூர்
160.     சீர்காழி (சட்டமன்றத் தொகுதி)     நாகப்பட்டினம்
161.     மயிலாடுதுறை (சட்டமன்றத் தொகுதி)     நாகப்பட்டினம்
162.     பூம்புகார் (சட்டமன்றத் தொகுதி)     நாகப்பட்டினம்
163.     நாகப்பட்டினம் (சட்டமன்றத் தொகுதி)     நாகப்பட்டினம்
164.     கீழ்வேளூர் (சட்டமன்றத் தொகுதி)     நாகப்பட்டினம்
165.     வேதாரண்யம் (சட்டமன்றத் தொகுதி)     நாகப்பட்டினம்
166.     திருத்துறைப்பூண்டி (சட்டமன்றத் தொகுதி)     திருவாரூர்
167.     மன்னார்குடி (சட்டமன்றத் தொகுதி)     திருவாரூர்
168.     திருவாரூர் (சட்டமன்றத் தொகுதி)     திருவாரூர்
169.     நன்னிலம் (சட்டமன்றத் தொகுதி)     திருவாரூர்
170.     திருவிடைமருதூர் (சட்டமன்றத் தொகுதி)     தஞ்சாவூர்
171.     கும்பகோணம் (சட்டமன்றத் தொகுதி)     தஞ்சாவூர்
172.     பாபநாசம் (சட்டமன்றத் தொகுதி)     தஞ்சாவூர்
173.     திருவையாறு (சட்டமன்றத் தொகுதி)     தஞ்சாவூர்
174.     தஞ்சாவூர் (சட்டமன்றத் தொகுதி)     தஞ்சாவூர்
175.     ஒரத்தநாடு (சட்டமன்றத் தொகுதி)     தஞ்சாவூர்
176.     பட்டுக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி)     தஞ்சாவூர்
177.     பேராவூரணி (சட்டமன்றத் தொகுதி)     தஞ்சாவூர்
178.     கந்தர்வக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி)     புதுக்கோட்டை
179.     விராலிமலை (சட்டமன்றத் தொகுதி)     புதுக்கோட்டை
180.     புதுக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி)     புதுக்கோட்டை
181.     திருமயம் (சட்டமன்றத் தொகுதி)     புதுக்கோட்டை
182.     ஆலங்குடி (சட்டமன்றத் தொகுதி)     புதுக்கோட்டை
183.     அறந்தாங்கி (சட்டமன்றத் தொகுதி)     புதுக்கோட்டை
184.     காரைக்குடி (சட்டமன்றத் தொகுதி)     சிவகங்கை
185.     திருப்பத்தூர், சிவகங்கை (சட்டமன்றத் தொகுதி)     சிவகங்கை
186.     சிவகங்கை (சட்டமன்றத் தொகுதி)     சிவகங்கை
187.     மானாமதுரை (சட்டமன்றத் தொகுதி)     சிவகங்கை
188.     மேலூர் (சட்டமன்றத் தொகுதி)     மதுரை
189.     மதுரை கிழக்கு (சட்டமன்றத் தொகுதி)     மதுரை
190.     சோழவந்தான் (சட்டமன்றத் தொகுதி)     மதுரை
191.     மதுரை வடக்கு (சட்டமன்றத் தொகுதி)     மதுரை
192.     மதுரை தெற்கு (சட்டமன்றத் தொகுதி)     மதுரை
193.     மதுரை மத்தி (சட்டமன்றத் தொகுதி)     மதுரை
194.     மதுரை மேற்கு (சட்டமன்றத் தொகுதி)     மதுரை
195.     திருப்பரங்குன்றம் (சட்டமன்றத் தொகுதி)     மதுரை
196.     திருமங்கலம் (சட்டமன்றத் தொகுதி)     மதுரை
197.     உசிலம்பட்டி (சட்டமன்றத் தொகுதி)     மதுரை
198.     ஆண்டிப்பட்டி (சட்டமன்றத் தொகுதி)     தேனி-அல்லிநகரம்
199.     பெரியகுளம் (சட்டமன்றத் தொகுதி)     தேனி-அல்லிநகரம்
200.     போடிநாயக்கனூர் (சட்டமன்றத் தொகுதி)     தேனி-அல்லிநகரம்
201.     கம்பம் (சட்டமன்றத் தொகுதி)     தேனி-அல்லிநகரம்
202.     இராஜபாளையம் (சட்டமன்றத் தொகுதி)     விருதுநகர்
203.     திருவில்லிபுத்தூர் (சட்டமன்றத் தொகுதி)     விருதுநகர்
204.     சாத்தூர் (சட்டமன்றத் தொகுதி)     விருதுநகர்
205.     சிவகாசி (சட்டமன்றத் தொகுதி)     விருதுநகர்
206.     விருதுநகர் (சட்டமன்றத் தொகுதி)     விருதுநகர்
207.     அருப்புக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி)     விருதுநகர்
208.     திருச்சுழி (சட்டமன்றத் தொகுதி)     விருதுநகர்
209.     பரமக்குடி (சட்டமன்றத் தொகுதி)     இராமநாதபுரம்
210.     திருவாடாணை (சட்டமன்றத் தொகுதி)     இராமநாதபுரம்
211.     இராமநாதபுரம் (சட்டமன்றத் தொகுதி)     இராமநாதபுரம்
212.     முதுகுளத்தூர் (சட்டமன்றத் தொகுதி)     இராமநாதபுரம்
213.     விளாத்திகுளம் (சட்டமன்றத் தொகுதி)     தூத்துக்குடி
214.     தூத்துக்குடி (சட்டமன்றத் தொகுதி)     தூத்துக்குடி
215.     திருச்செந்தூர் (சட்டமன்றத் தொகுதி)     தூத்துக்குடி
216.     ஸ்ரீவைகுண்டம் (சட்டமன்றத் தொகுதி)     தூத்துக்குடி
217.     ஓட்டப்பிடாரம் (சட்டமன்றத் தொகுதி)     தூத்துக்குடி
218.     கோவில்பட்டி (சட்டமன்றத் தொகுதி)     திருநெல்வேலி
219.     சங்கரன்கோவில் (சட்டமன்றத் தொகுதி)     திருநெல்வேலி
220.     வாசுதேவநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)     திருநெல்வேலி
221.     கடையநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)     திருநெல்வேலி
222.     தென்காசி (சட்டமன்றத் தொகுதி)     திருநெல்வேலி
223.     ஆலங்குளம் (சட்டமன்றத் தொகுதி)     திருநெல்வேலி
224.     திருநெல்வேலி (சட்டமன்றத் தொகுதி)     திருநெல்வேலி
225.     அம்பாசமுத்திரம் (சட்டமன்றத் தொகுதி)     திருநெல்வேலி
226.     பாளையங்கோட்டை (சட்டமன்றத் தொகுதி)     திருநெல்வேலி
227.     நாங்குநேரி (சட்டமன்றத் தொகுதி)     திருநெல்வேலி
228.     ராதாபுரம் (சட்டமன்றத் தொகுதி)     திருநெல்வேலி
229.     கன்னியாகுமரி (சட்டமன்றத் தொகுதி)     கன்னியாகுமரி மாவட்டம்
230.     நாகர்கோவில் (சட்டமன்றத் தொகுதி)     கன்னியாகுமரி மாவட்டம்
231.     குளச்சல் (சட்டமன்றத் தொகுதி)     கன்னியாகுமரி மாவட்டம்
232.     பத்மனாபபுரம் (சட்டமன்றத் தொகுதி)     கன்னியாகுமரி மாவட்டம்
233.     விளவங்கோடு (சட்டமன்றத் தொகுதி)     கன்னியாகுமரி மாவட்டம்
234.     கிள்ளியூர் (சட்டமன்றத் தொகுதி)     கன்னியாகுமரி மாவட்டம்

தகுதி இருந்தால் ஆசைப்படுங்கள்! What is your qualification to start a business

தகுதி இருந்தால் ஆசைப்படுங்கள்!

பங்களா வீடு, சொகுசுக் கார், வீட்டினுள்ளும், அலுவலகத்திலும் குளு குளு அறைகள், பலரும் திரும்பிப்பார்க்கும் அளவிற்கு சமூக அந்தஸ்து! இப்படி வாழ்ந்தால் எப்படியிருக்கும் என்கிற கற்பனை யாருக்குத்தான் இல்லை. ஆனால், கற்பனை காண்பவர்களில் ஒரு சிலருக்கு மட்டுமே இந்த வாழ்க்கை அமைகிறது. அந்த ஒரு சிலரின் வாழ்வு சூழலைக் கவனித்தோமானால், அவர்கள் ஏதாவது தொழில் செய்து கொண்டிருப்பார்கள்.  இந்த வசதியான வாழ்க்கைச் சூழலை அனுபவிக்கவேண்டும், அதற்கு நாமும் ஏதாவது தொழில் செய்யவேண்டும் என்கிற எண்ணம் கிட்டத்தட்ட எல்லா மனிதர்களிடத்தும் உண்டு. வாய்ப்பு கிடைக்கும்போது இப்படிப்பட்டவர்கள் தங்களுக்கான தொழிலைத் தேர்ந்தெடுத்து களத்தில் குதித்துவிடுகின்றனர்.

2 1

இப்படிக் குதித்தவர்கள் எல்லோரும் வெற்றியாளர்களாக வலம் வருகிறார்களா? தொழில் செய்பவர்கள் எல்லோரும் வசதியான வீட்டில்தான் வசிக்கிறார்களா? சொகுசுக் காரில்தான் உலா வருகிறார்களா? தொழில் செய்பவர்கள் அனைவருக்குமே சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் இருக்கிறதா?
இதை அலசி, ஆராய்ந்து பார்த்தோமானால், அங்கே  பல உண்மை நிலவரங்கள் இது வரையில் நாம் கேள்விப்படாதவையாக இருக்கும். ஏனென்றால், தொழில் செய்து காணாமல் போனவர்களின் பட்டியலும் நிறைய உண்டு.

தொழில் செய்வதற்கும் வேலை செய்வதற்கும் சில முரண்பாடுகள், வேறுபாடுகள் இருக்கின்றன. வேலை செய்தால் அதற்கு  சம்பளம் கிடைக்கும். தொழில் செய்தால் லாபம் கிடைக்கும். சம்பளம் மெதுவாக உயரும். ஒரு எல்லையைத் தாண்டாது. வேலை செய்பவருடைய சம்பளத்தை இன்னொருவர் நிர்ணயிக்கிறார். ஆனால், தொழில் செய்பவருடைய  லாபம் அவருடைய உழைப்பையும், திறமையையும் பொருத்து வேகமாக உயரும். அதன் உயரத்திற்கு அளவே இல்லை. லாபம் அதிகரிக்க அதிகரிக்க நாமும், நம்மைச் சார்ந்தவர்களும் நல்லபடியாக வாழமுடியும். இதனால்தான்,  தொழில் செய்யவேண்டும் என்கிற எண்ணம் யாவரிடமும் வியாபத்திருக்கிறது.

ஆக, லாபம், வசதியான வாழ்க்கை என்கிற என்கிற எண்ணம்தான் பலரிடம் தொழில் ஆசையைத் தூண்டிவிடுகிறது. ஆசைதான் எல்லாவற்றிற்கும் காரணம்.  ஆனால், ஆசைப்படுவதற்கும் ஒரு தகுதி வேண¢டுமல¢லவா?   அது நம்மிடம் இருக்கிறதா என்பதை உணர்ந்து பார்த்து, செயல்படுபவர்கள் மட்டுமே, இந்த போட்டி நிறைந்த உலகில் நிலையாக நீடித்து நிற்கமுடியும். இங்கே, தகுதியற்றவர்கள் ஒரு செயலைச் செய்யும்போது முதல் சுற்றிலேயே காணாமல் போய்விடுவார்கள். உலகத்தில் எந்தச் செயலைச் செய்வதற்கும் ஒரு தகுதி தேவைப்படுகிறது. அப்படியிருக்கும்போது தொழில் செய்து  லாபத்தைப் பெறுவதற்கும் தகுதிகள் இருக்கும்தானே!

அப்படியானால்  தொழில் செய்ய முனைவோருக்கு எந்த மாதிரியான தகுதிகள் வேண்டும்?
இந்தக் கேள்விக்குப் விடை, நீங்கள் செய்யும் தொழிலைப் பொருத்தே இருக்கும். உதாரணமாக, ஒரு தனியார் நிறுவனம்  மூன்று நபர்களை வேலைக்கு எடுக்கவிருப்பதாக விளம்பரம் வெளியிட்டிருக்கிறது. 1.காவலாளி, 2. கணக்கர், 3. மேலாளர். இந்த மூன்று வேலைகளுக்கும் பலர் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் அனைவரையும் அந்த நிறுவனம் பணியமர்த்திக்கொள்வதில்லை.

காரணம், அந் நிறுவனம் காவலாளிக்கு படிப்பு பத்தாம் வகுப்பு, கட்டுமஸ்தான உடல்வாகு, உயரம் குறைந்தபட்சம் 170 செ.மீ, வயது 25லிருந்து 30க்குள் இருக்கவேண்டும் எனவும், கணக்கர் வேலைக்கு படிப்பு டிகிரி, வயது 30லிருந்து 35க்குள், முன் அனுபவம் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் எனவும், மேலாளர் பதவிக்கு படிப்பு முதுகலை பட்டம், வயது 40லிருந்து 45க்குள், ஆங்கில மொழிப் புலமை, முன் அனுபவம் ஐந்து ஆண்டுகள் எனவும், அந்தந்த வேலைகளுக்கான தகுதிகளை எதிர்பார்க்கலாம். இந்தத் தகுதிகள் யாரிடம் உச்சபட்சமாக இருக்கிறதோ, அவரையே அந் நிறுவனம் இறுதியாகப் பணியமர்த்துகிறது.

ஆக, ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து சம்பளம் வாங்கப்போகும் ஊழியர்களுக்கே இத்தனைவிதமான தகுதிகள் எதிர்பார்க்கப்படும்போது, அவர்களை வேலை வாங்கப்போகும் முதலாளிக்கு எத்தனை தகுதிகள் தேவைப்படும்?

பூமிப் பந்தின் நிலப்பரப்பில் ஆயிரக்கணக்கான தொழில்கள் இருக்கின்றன. இந்தத் தொழில்களைத் தொடங்குவதற்கு முன்னர் அதனதன் தன்மையைப் பொருத்து வெவ்வேறுவிதமான தகுதிகள் தேவைப்படுகின்றன. ஆனால், எல்லாத் தொழில்களுக்கும் சில அடிப்படையான தகுதிகள் உண்டு.  அவை நம்மிடம் இருக்கவேண்டும். இல்லையென்றால் வளர்த்துக்கொண்டு, கற்றுக்கொண்டு தொழிலைத் தொடங்கவேண்டும்.

பணம் இருந்தால் போதும், மற்ற விஷயங்கள் தானாக வந்துசேரும் என்கிற நினைப்பு  புதிதாகத் தொழில் தொடங்குபவர்களில் பலருக்கும் இருக்கிறது. பணம் என்பது உங்களின் தொழிலுக்கு ஒரு முதலீடு மட்டுமே. முதலீடு எப்போதும் தொழிலாகாது. முதலீட்டைப் பெருக்குவதுதான் தொழில். உங்கள் முதலீடு பெருகவேண்டுமானால், உங்கள் தொழில் சார்ந்த வேறுபல விஷயங்களையும் நீங்கள் தெரிந்துகொண்டிருக்க வேண்டும். அதுதான் இங்கே தகுதியாக வரையறுக்கப்படுகிறது. எனவே, தொழில் தொடங்க பணத்தோடு வேறு பல காரணிகளும் தேவைப்படுகின்றன. அந்தக் காரணிகள் உங்கள் தொழிலுக்கு முன்பாகச் சென்றுகொண்டிருந்தால் மட்டுமே பணம் என்கிற முதலீடு  பாதுகாப்பாக வளர்ந்துகொண்டிருக்கும்.

பணம் சம்பாதிப்பதற்குத்தான் தொழில் தொடங்குகிறோம். ஆனால், பணம் பணத்தை சம்பாதிக்காது. அதற்கான தகுதிகள் இருந்தால் மட்டுமே அது சாத்தியப்படுகிறது. ஆக, தொழில் தொடங்குவதற்கான தகுதிச் சுற்றில் பணத்திற்கு முன்பாக வேறு சில தகுதிகளை நாம் வளர்த்துக்கொண்டே ஆகவேண்டும்.

பொதுவாக, தொழில் என்பது மூன்று நிலைகளை உள்ளடக்கியிருக்கிறது. முதலாவது உற்பத்தித் தொழில், இரண்டாவது விற்பனைத் தொழில், மூன்றாவது சேவைத் தொழில். உலகத்தில் உள்ள தொழில்கள் எல்லாமே இந்த மூன்று நிலைகளுக்குள்  வந்துவிடும்.  பொதுவான விஷயங்களில்  இந்த மூன்று தொழில்களுக்கும் அடிப்படையான சில தகுதிகள் இருக்கின்றன.
நீங்கள் தொடங்கப்போகின்ற தொழில் அல்லது செய்துகொண்டிருக்கிற தொழில் இந்த மூன்று நிலைகளுள் எந்த வகையைச் சார்ந்தது என்பதை உங்களால் கணிக்க முடிகிறதா? அந்த தொழிலுக்கான அடிப்படைத் தகுதிகள் என்னவென்று உங்களால் தீர்மானிக்க முடிகிறதா? இவற்றை நீங்கள் தெரிந்து வைத்திருந்தால் மட்டுமே உங்கள் வளர்ச்சி நிலையானதாக இருக்கும்.
ஒருவருக்கோ, பலருக்கோ, குறிப்பிட்ட நிறுவனத்திற்கோ, பல நிறுவனத்திற்கோ, அமைப்பிற்கோ ஒரு பொருளைத் தயாரித்துக் கொடுப்பதே உற்பத்தித் தொழில். இங்கே உற்பத்தி என்ற நிலையில் மட்டுமே உங்களின் தொழில் இருக்கும். விற்பனையைப் பற்றி உங்களுக்குக் கவலை இல்லை. ஒருவேளை அந்தப் பொருளின் விற்பனை என்பதும் உங்களைச் சார்ந்தே இருக்குமானால் நீங்கள் உற்பத்தித் தொழில், விற்பனைத் தொழில் இரண்டையும் செய்பவராக இருக்கிறீர்கள். நீங்கள் கம்ப்யூட்டர் தயாரிப்பவராக இருக்கலாம், கடலைமிட்டாய் தயாரிப்பவராக இருக்கலாம். இரண்டுமே உற்பத்தித் தொழில்தான். விவசாயமும் உற்பத்தித் தொழில்தான். விவசாயத்திற்குத் தேவையான உரங்களைத் தயாரிப்பதும் உற்பத்தித் தொழில்தான். ஆடுவளர்ப்பு, கோழி வளர்ப்பும்கூட உற்பத்தித் தொழில்தான்.
ஒ ரு பொருள், அ த ன் தயாரிப்பாளரிடமிருந்தோ அல்லது வேறு நபர்களிடமிருந்தோ கொள்முதல் செய்து, குறிப்பிட்ட லாபம் வைத்து, அதன் நுகர்வோர்களிடம் அல்லது அந்தப் பொருளை பயன்படுத்துபவர்களிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பதே விற்பனைத் தொழில். பலசரக்குக் கடைகள், காய்கறிக்கடைகள் தொடங்கி ஏஜென்சிகள், டிஸ்ரிபியூட்டர்கள் என பல தளங்களில் இது நீண்டு செல்லும். பெரும்பாலான சில்லறை விற்பனைக் கடைகள் இதைத்தான் செய்துவருகின்றன.

ஒருவருக்கோ, பலருக்கோ, ஒரு நிறுவனம் அல்லது அமைப்பு போன்றவற்றுக்கோ நீங்களோ அல்லது உங்கள் நிறுவனமோ குறிப்பிட்ட பணியைச் செய்துகொடுத்து, அதன்மூலம் வருமானம் பெறுவதே சேவைத்தொழில். அதாவது பிறருக்காக நீங்கள் செய்கின்ற வேலை. டெய்லர் கடைகள், போக்குவரத்துத் தொழில்கள், அச்சகத் தொழில், பயிற்றுநர் தொழில் போன்ற பலவற்றை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். சேவைத் தொழிலில் குறிப்பிட்ட வேலை அல்லது பணி உங்களால் செய்துமுடிக்கப்பட்டதும் வாடிக்கையாளர்களுடைய மனநிறைவு என்பது முக்கியமாகக் கருதப்படும். உங்களால் வாடிக்கையாளர் மனநிறைவு அடையவில்லையென்றால் அடுத்த முறை அதே தேவைக்காக வேறு ஒருவரை அவர் நாடுவார்.

எனவே, நீங்கள் எந்தத் தொழிலைச் செய்தாலும், செய்ய விரும்பினாலும், அத் தொழில் சார்ந்த பொதுவான திறமைகளை வளர்த்துக்கொண்டு கால் பதியுங்கள். நிச்சயமாக உங்கள் கால்தடம் கல்வெட்டாக மாறும்.

பாலமுருகன்

நன்றி சூரியகதிர் தமிழ் மாத இதழ்

மார்பக புற்றுநோய்-Breast Cancer-mammo gram-Needle Biopsy

மார்பகப் புற்றுநோய்

திருமணம் ஆகாத பெண்களையும் தாக்கும்!

டாக்டர் சரவணன் பெரியசாமி, குளோபல் மருத்துவமனை

         இது 21ம் நூற்றாண்டு. எல்லாவற்றிற்கும் விடை சொல்லி வருகிற மருத்துவ அறிவியல் காலம். ஆனால், இன்னமும் அடித்தட்டு மக்களிடமும், கிராமத்து மக்களிடமும் சிலவகை அறியாமை இருக்கத்தான் செய்கிறது. ஊடகங்கள் என்னதான் சொல்லிவந்தாலும், அவற்றை காதில் வாங்கிக் கொள்ளாமல், எல்லாவற்றிற்கும் அவர்களாகவே தீர்வு சொல்லித் திரிகிற மக்கள் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. Drsaravananperiasami

           பெண்கள் தினத்தைக் கொண்டாடும் மார்ச் மாதத்தில், போதிய கல்வி அறிவு இல்லாமல், வெள்ளந்தியாய் கிராமங்களில் வசித்து வரும் பெண்களும் நிறைய இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரை அண்மையில் சந்திக்க நேர்ந்தது. வயது 29. இரண்டு குழந்தைகளுக்குத் தாய். சோகம், அறியாமையின் மொத்த உருவமாக அவரது கணவர் அருகில் நிற்கிறார். அரை மணி நேர உரையாடலில் அவர்களது வாழ்வு பற்றி நிறைய உணர முடிந்தது.

           விஷயம் இதுதான், அந்தப் பெண்ணுக்கு மார்பகப் புற்றுநோய். சிகிச்சைக்காக சென்னைக்கு வந்து, வலது பக்க மார்பு அகற்றப்பட்ட நிலையில், மேற்கொண்டு சிகிச்சையைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

            பெண்களை எளிதாகத் தாக்கும் நோய்களில் ஒன்றாக மார்பகப் புற்று நோய் இன்று வெகு வேகமாகப் பரவி வருவதை படித்த பெண்கள்கூட அறியா திருக்கிறார்கள். ‘‘இவருக்கு வரும், இவருக்கு வராது என்கிற எந்தவிதப் பாகு பாடும் இல்லாத நோய் புற்றுநோய். குறிப்பாக, மார்பகப் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை அடிக்கடி பெண்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பது ஊடகங்களின் கையில்தான் இருக்கிறது. இந் நோய் பற்றிய நினைவூட்டலை செய்துகொண்டே இருப்பது ஊடகங்களின் கடமையும்கூட’’ என்கிறார் சென்னை குளோபல் மருத்துவமனையின் புற்றுநோய் மருத்துவர் டாக்டர் சரவணன் பெரியசாமி.

            மார்பகப் புற்றுநோய் குறித்த பல சந்தேகங்களோடு டாக்டர் சரவணன் பெரியசாமியிடம் மேலும் பேசினோம்.

மார்பக புற்று நோய்?
மார்பகத்தில் உள்ள சில அனுக்கள் அளவுக்கதிகமாக வளர்வதே மார்பகப் புற்றுநோய். புற்று அனுக்கள் மற்ற அனுக்களைக் காட்டிலும் பல வகைகளில் வேறுபட்டிருக்கும். அவை வேகமாகப் பிரிந்து வளர்ந்து சுற்றிலுமுள்ள திசுக்களையும் ஆக்கிரமிக்கும்.

அறிகுறிகள் எப்படித் தென்படும். வலி இருக்குமா?
துவக்க நிலை மார்பக புற்றுநோய் சாதாரணமாக வலியை உண்டாக்காது. மார்பக புற்றுநோய் வளரத் தொடங்கும் போது எந்தவித அடையாளமும் அறிகுறியும் இருக்காது. புற்றுநோய் வளர வளர கீழ்க்கண்ட அறிகுறிகள் ஏற்படும்.
1, வீக்கம் அல்லது மார்பகம் அல்லது அக்குள் பகுதி தடிக்கும். 2. மார்பகத்தின் அளவும் வடிவும் மாறுபடும். 3. சுரப்புக் காம்பிலிருந்து இரத்தமோ வேறு திரவமோ கசியும். 4. மார்பகத்தின் தோல், கருப்பு வளையம், காம்பு முதலியவற்றின் வண்ணம் மாறும். (குழிவிழுதல், மடிப்பு விழுதல், சொரசொரத்தல்). 5. சமீப காலமாக காம்பு உள்ளிழுத்துக் கொள்ளும். இந்த அறிகுறிகளில் ஏதேனும் பெண்கள் உணர்ந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

மம்மோ கிராம் (mammo gram) என்கிறார்கள். இந்தச் சோதனை எதற்காக?
மார்கப் புற்றுநோய் இருக்கிறதா, இல்லையா என்கிற சந்தேகத்தை உறுதிசெய்யும் சோதனை முறையே மம்மோகிராம். தட்டு போன்ற கருவியால் மார்பகத்தைத் தட்டையாக அழுத்தி மார்பகத்தின் தெள்ளிய வடிவத்தை அறிய முயலப்படும். இதன்மூலம் மார்பகக் கட்டியின் முக்கிய விவரங்களை மம்மோகிராம் மருத்துவருக்கு அளிக்கும். மேலும், அதிர்வுடன் கூடிய ஒலியலைகளை மார்பகத்தின் மீது செலுத்தி மார்பகத்தின் கட்டி, கெட்டியாக (திடமாக) உள்ளதா அல்லது திரவம் நிறைந்துள்ளதா என்று கண்டறியலாம். மம்மோ கிராபியுடனும் இந்தப் பரிசீலனையைச் செய்யலாம். இதுதவிர நீடில் பயோப்சி (Needle Biopsy) என்கிற முறையிலும் இது கண்டறியப்படுகிறது.

மார்பகப் புற்று நோயில் பல வகைகள் இருக்கிறதாமே?
பல வகைகள் உண்டு. அவற்றை மிக விரிவாக இங்கே சொல்லமுடியாது என்றாலும், கூடுமானவரை விளக்குகிறேன்.
1. நாளப்புற்று நோய் (Ductoal carcinome)
இது மிகச் சாதாரணமாக வரும் மார்பகப் புற்றுநோய் வகையாகும். நாளங்கள் தடிப்பதின் வழி இது துவங்கும்.
2. மடிப்பு சதை புற்றுநோய் (lobuler carcinome)
இது மார்பகத்தின் மடிப்புச் சதைகளில் உண்டாகும்.
3. முற்றிலும் பரவிய புற்றுநோய் (metastatic)
மார்பகத்தின் வெளிப்பகுதியில் புற்றுநோய் முற்றிலும் பரவிய பின்னர் புற்றுநோய் அணுக்கள் அக்குளின் கீழேயுள்ள லிம்ப் நோட்களில் அதிகமாகப் பரவும். எப்போது இத்தகைய முடிச்சுகளில் புற்று நோய் பரவுகிறதோ, புற்றுநோய் அணுக்கள் உடலின் மற்ற எல்லா பாகங்களிலும், மற்ற எல்லா லிம்ப் நோட்களிலும், எலும்பு, ஈரல், நுரையீரல் முதலிய அங்கங்களிலும் ஏற்கனவே பரவி விட்டது என்பதை அறியலாம்.

இதில் ஒன்று, இரண்டு, மூன்று என பல நிலைகள் உள்ளது என்கிறார்களே? எந்த நிலையில் இதற்கான சிகிச்சையைத் தொடங்குதல் நலம் பயக்கும்?
முதல் நிலை என்றால் புற்று நோய் அணுக்கள் இன்னும் மார்பகத்தைத் தவிர வேறெங்கும் பரவில்லை என்றும், கட்டியின் சுற்றளவு 2,5 செ,மீட்டரைக் காட்டிலும் அதிகமில்லை என்று பொருள்.

இரண்டாம் நிலை அக்குளின் கீழேயுள்ள லிம்ப் நோட்களில் புற்று நோய் பரவி விட்டது என்றும் மார்பகக் கட்டியின் சற்றளவு 2.5 செ.மீட்டரைக் கடந்து விட்டது என்றும் பொருள்.

மூன்றாம் நிலையை முதிர்ந்த புற்றுநோய் என்பார்கள். மார்பகக் கட்டியின் சுற்றளவு 5 செ.மீட்டரை கடந்து விட்டது என்றும் மார்பகச் சுவர் அல்லது மேல் தோலில் பரவிவிட்டுள்ளது என்றும் பொருள். இந்நிலையில் அக்குளின் கீழே உள்ள லிம்ப் நோட்களில் புற்றுநோய் அணுக்கள் முற்றிலும் பரவி விடும்.

நான்காம் நிலை முற்றிலும் பரவி விட்ட புற்றுநோயாகும். புற்றுநோய் மார்பகத்திலிருந்து உடலின் மற்ற பாகங்களான நுரையீரல், ஈரல், மூளை, எலும்புகள் மற்ற எல்லா லிம்ப் நோட்கள் அனைத்திலும் பரவி விட்டது என்று பொருள்.

ஒருமுறை சிகிச்சை எடுத்து குணம் அடைந்தவர்களுக்கு மீண்டும் புற்று நோய் வரக்கூடிய சாத்தியம் உண்டா?
மார்பகத்தில் உள்ள கட்டி முற்றிலும் அறுத்து அகற்றப் பட்ட பின்னரும் அல்லது அழிக்கப் பட்ட பின்னரும் சில நேரங்களில் கண்டு பிடிக்க முடியாத சில சிறு புற்றுநோயணுக்கள் மருத்துவத்திற்குப் பின்னரும் உடலில் விடுபட்டு இருந்தால் அல்லது மருத்துவத்திற்கு முன்னரே புற்றுநோய் பரவி விட்டிருந்தால் புற்றுநோய் மீண்டும் வரும்.

எம் மாதிரியான சிகிச்சை முறைகள் செய்யப்படுகிறது?
புற்றுநோய் கட்டியின் அளவு, இருப்பிடம், பரிசோதனையின் முடிவுகள், நோய் உள்ள நிலை அல்லது அளவு இவற்றைப் பொறுத்து மார்பகப் புற்று நோய்க்கான மருத்துவம் நடைபெறும். ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள புற்றுநோய் அணுக்களை நீக்கவோ, அழிக்கவோ, கட்டுபடுத்தவோ மருத்துவர் முடிவு எடுப்பார். அறுவை சிகிச்சை, கீமோ தெரபி எனும் மருத்துவம், அதிரொலி பாய்ச்ச மருத்துவங்கள் இந்த வகை மருத்துவத்துக்குட்பட்ட மருத்துவமாகும்.

ரேடியேஷன் தெரபி என்கிறார்களே? அது எதற்காக?
ரேடியேஷன் தெரபியில் (இதை ரேடியோ தெரபி என்றும் கூறுவார்கள்) புற்றுநோய் அணுக்களை அழித்து அவை மேலும் வளராமல் தடுப்பதற்கு ஆற்றல் வாய்ந்த எக்ஸ்-ரேக்களைப் பயன் படுத்துவார்கள். இந்தக் கதிர்கள் சாதாரணமாக வெளியிலுள்ள ரேடியோ பொருட்களிலிருந்து வெளிவந்து இயந்திரத்தின் உதவியால் மார்பகத்தை நோக்கிப் பாய்ச்சப் படுவதால் வெளிபுற கதிர்வீச்சு (External rerdiction)என்று கூறப்படும்.

அறுவை சிகிச்சை முடிந்தவர்களுக்கு கீமோ தெரபி கொடுப்பது அவசியமா?
கண்டிப்பாக கொடுக்க வேண்டும். புற்று அணுக்களை அழிக்க மருந்துகளைப் பயன்படுத்துவது இம்முறை மருத்துவமாகும். இது வழக்கமாக மருந்துகளின் கலவையாகும். ஊசியின் மூலமாக இது தரப்படும். கீமோ தெரபி உடலமைப்பு முழுதும் சார்ந்த மருத்துவ முறை. ஏனென்றால், தரப்படும் மருந்துகள் இரத்த ஓட்டத்தில் கலந்து உடல் முழுதும் பயணம் செய்யும். இது சுழற்சியாக தரப்படும். அதாவது மருத்துவ காலம், தேறும் காலம் மீண்டும் மருத்துவ காலம் என்று விட்டு விட்டு ஒன்றன்பின் ஒன்றாக நடைபெறும். புற்றுநோய் அணுக்கள் மேலும் பரவாமல் தடுக்க கீமோ தெரபி அவசியமாகப்படுகிறது.

திருமணம் முடிந்தவர்களுக்கு மட்டுமே மார்பகப் புற்றுநோய் வருமா?
என் மருத்துவ அனுபவத்தில் திருமணம் முடியாதவர்களுக்கும் மார்பகப் புற்றுநோய் வந்திருக்கிறது. எனவே, திருமணம் ஆகாத பெண்களையும் இது தாக்கலாம்! பெண்கள்தான் இதில் முன்னெச்சரிக்கையாக இருக்கவேண்டும். மார்பகங்களை சுய பரிசோதனை செய்தே புற்றுநோய்க் கட்டி இருக்கிறதா என்பதை ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிடலாம். நோயின் தாக்கம் அறிந்து முதலிலேயே மருத்துவரை நாடி வந்துவிட்டால், முற்றிலுமாக குணப்படுத்திவிடலாம்.

புற்றுநோயால் மார்பகத்தை அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்ட ஒரு பெண், அதன் பின்னர் குழந்தை பெற்றுக்கொள்ளல் சாத்தியமா?
குழந்தைப் பேற்றுக்கும் மார்பக இழப்புக்கும் தொடர்பு இல்லை.

நன்றி – சூரியகதிர்  மாத இதழ்

தத்துவங்கள்-வசனங்கள்-டயலாக்ஸ் மாமு

 • தோல்வி என்பது தள்ளி போடப்பட்ட வெற்றியே!
 • பல குழப்பங்களுக்குப் பின்னர் இறுதி முடிவெடுத்து செயல்பட்டுக் கொண்டிருப்பவனிடம் இன்னொரு தீர்வைச் சொல்லாதீர்கள்.
 • பாப்புலரானவன் பாத்ரூம் போனாக்கூட நியூஸ்ல வரும். பாப்புலரா இல்லாதவன் பாடையில போனாலும் நியூஸ் வரவே வராது.
 • இலக்கியவாதிகள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்ளும்போது,பெண்களின் குழாயடிச் சண்டையைவிட மோசமாக அமைந்துவிடும்.
 • நம்மால் சிறப்பாக செய்ய முடிகிற செயலை இன்னொருவன் ஏனோதானோவென்று செய்து முடித்து, பேர் வாங்கிச் செல்லும்போது, அவன் அதிர்ஷ்டக்காரன் என அங்கலாய்ப்பதைவிட, நாம் முயற்சிக்கவில்லை என்கிற மெய்யை உணர்ந்துகொண்டால், ஜெயம் உண்டாகும்.
 • ஒரு நாளைக் கடந்து செல்ல, குறைந்த பட்சம் ஐந்து பொய்கள் பயன்படுத்த வேண்டியிருக்கிறது.
 • சோம்பேறித்தனம், உடல் சுகத்துக்கு முக்கியம் கொடுத்தல்…இந்த இரண்டு பண்புகளும் இருக்கிற மனிதன் நிச்சயமாக முன்னேற மாட்டான்.
 • அவசரத்துக்கு எப்படி உதவவேண்டும் என்பதை இலக்கியவாதிகள் மட்டுமே  தெரிந்து வைத்திருக்கிறார்கள். தேவைப்படும்போது எழுதித் தீர்த்துவிடுவார்கள்.
 • நிறையப் படித்தாயிற்று. அவற்றை பறைசாற்றவும், செயல்படுத்தவும், திணிக்கவும் மனிதர்கள் வேண்டும்.
 • வாழ்க்கையோடு தொடர்புடைய நிஜங்கள் படைப்புகளாக மாறும்போதுதான், அவற்றின் கனம் அதிகரிக்கிறது. கவனம் பெறுகிறது. கைதட்டல் வாங்குகிறது.
 • பாசிட்டிவான விஷயங்கள் பற்றியே எல்லோரும் எழுதிவந்தால், எதிர்மறையான நிகழ்வுகள் நடக்கும்போது, அவற்றை எதிர்கொள்ள திராணி இல்லாமல் போகும். எல்லோரும் காதலைப் பற்றியே எழுதி வந்தால், காமம் என்னவென்பதே தெரியாமல், மனித இனமே அழிந்துபோகும். எனவே, நெகட்டிவ் எழுதுவதற்கும், இடையிடையே  அவற்றை கலந்துகட்டி அடிப்பதற்கும் இறைவன் ஆங்காங்கே ஒருவரைப் படைத்திருப்பான். அது படைப்பின் நோக்கமே அன்றி, படைக்கப்பட்டவர்களின் நோக்கம் அல்ல!
 • நமக்கு நன்றாகத் தெரிந்த நபரை, நம்மிடம் புதிதாகப் பழகிய ஒருவர் அறிமுகப்படுத்தும்போது, மூன்றுபேருமே வழியும் சூழல் வந்துவிடுகிறது.
 • துர்நாற்றத்தையும் விரும்பிச் சுவைக்க வைகப்பதே படைப்பின் இரகசியம்!
 • அவசியமானவற்றை விருப்பமானவையாக மாற்றிக்கொண்டால், வெற்றி எளிதாக நம் பக்கம் வந்துவிடும்.
 • கடைசித் தீக்குச்சிதான் அதிகக் கவனத்தோடு கையாளப்படுகிறது.
 • சிக்னலில் நிற்கும்போது அழகான பெண் சாலையைக் கடந்து சென்றால், எவரும் விளக்கை பார்ப்பதில்லை.
 • எதையெல்லாம் உங்களால் பாதுகாக்க முடியவில்லையோ, அவையெல்லாம் உங்களைவிட்டு என்றாவது விலகிச் சென்றுவிடும்.
 • உயிரினங்கள் வாழ்க்கையின் எந்தப் பகுதிக்கும் விடை கிடையாது. அறிவியல் ஒரு புறமும், ஆன்மீகம் மறுபுறமும் ஆராய்ந்துகொண்டே இருக்கும். கிடைக்கிற முடிவுகள் அனைத்தும் தற்காலிகமே! முடிவும், விடையும் கிடைக்க வாழ்க்கை ஒன்றும் கூட்டல், கழித்தல் கணக்கல்ல!
 • எடுத்த முடிவு சில காலத்திற்குப் பின்னர் தவறாகப் படின், நீங்கள் கூடுதல் அனுபவத்தைப் பெற்றிருக்கிறீர்கள்.
 • தொடர்ந்து பத்து முட்டாள்களைச் சந்திக்கும்போது, பதினொன்றாவது வருகிறவனும் முட்டாளாகவே இருப்பான் என முட்டாள்தனமாக கணித்துவிடுகிறது மனது. நம்மால் தவறாகக் கவனிக்கப்பட்டு, தொடர்பு அறுந்துபோன சில வெற்றியாளர்களோடு மீண்டும் தொடர்பு கொள்ள முடியாமைக்கு இதுவும் ஒரு காரணம்.
 • சுயமாக முடிவெடுக்கத் தெரியாதவன், பெரும்பாலும் அடிமையாகவே இருப்பான்.
 • கடந்து வந்த பாதையில் நாம் எடுத்த முடிவுகளே இன்றைய நம் நிலைக்குக் காரணம்.
 • முடிவெடுக்கும் முன் எத்தனை முறை வேண்டுமானாலும் குழம்புங்கள். ஆனால், முடிவெடுத்த பின்னர் குழம்பாதீர்கள்.
 • எப்படியாவது இதற்கு எதிர் கருத்து கூறியாகவேண்டும். அப்போதுதான் நானும் அறிவாளி பட்டியலில் இணைக்கப்படுவேன் என்பதே பல அறிவாளிகளின் முட்டாள்தனமான செயல்களில் ஒன்றாக இருக்கிறது. 
 • தோல்வி, அவமானத்தின்போது மட்டுமல்ல, வெற்றியின்போதும் தனிமையைத் தேடுங்கள். அதுவே உங்களை உங்களாக்கும். 
 • கடின முயற்சிக்குப் பின்னர் கிடைக்கும் வெற்றியே வாழ்வில் மகத்தானதாக கருதப்படுகிறது. அதை ஒரு போதும் மறக்க முடியாது.
 • பெரும்பாலான முடிவுகள் தனிமையில் எடுக்கப்படுகின்றன.
 • சமநிலை அற்ற மனநிலைதான் தவறுகள் உருவாக முதல் காரணமாக இருக்கிறது.
 • ஆண்கள் கடைசிவரையிலும் பற்றாக்குறையுடனே வாழப் பழகிக்கொண்ட விடயங்களில், செக்ஸ் முதலிடம் பெறுகிறது.
 • ஆண்களின் கவனம் ஈர்க்கும் மூன்றாம் பெண்களில் பலரும் அந்தக் கணமே அவனுள் கற்பழிக்கப்படுகிறார்கள்.
 • ஆண் எதிரே வரும்போது, பெண் தனது மார்புக் கச்சையை சரி செய்யவில்லை என்றால், குருடன் கடந்து போகிறான் என அர்த்தம்.
 • நான் செய்யாத தப்பில்லை எனச் சொல்வதும் ஒரு வகை வேலியே!
 • தோல்வி உறுதி என்றால் போர்க்களம் போகாதே! சமாதானம் பேசிவிடு, நேரமும் ஆயுதங்களும் சேமிப்பாகிவிடும்.
 • ஆயிரம் வப்பாட்டி வைக்கலாம்.அன்பு செலுத்துவது மனைவியிடம்தான்.
 • பத்து ரூபாய் சம்பாதிக்கவேண்டிய இடத்தில் எட்டு ரூபாய் சம்பாதிப்பவன் முட்டாள்!
 • பத்து ரூபாய் செலவு செய்யவேண்டிய இடத்தில் எட்டு ரூபாய் செலவழிப்பவன் புத்திசாலி!
 • பத்து ரூபாய் சம்பாதிக்கவேண்டிய இடத்தில் பனிரெண்டு ரூபாய் சம்பாதிக்கிறவன் திறமைசாலி!
 • பத்து ரூபாய் செலவழிக்கவேண்டிய இடத்தில் பனிரெண்டு ரூபாய் செலவழிப்பவன் சோம்பேறி!
 • மரித்தல் மட்டும் உயிர்களுக்கு இல்லையென்றால் உலகம் என்றோ மரணித்திருக்கும்!
 • இருப்பதைவிட கிடைக்கப்போவது சிறப்பானதாகக் கிடைக்குமானால், வேண்டுமென்றே தவறவிடுவோம்.
 • செயல்படுத்த முடியாத, தொடர்ந்து வரும் நாட்களில் பராமரிக்க முடியாமல், விருப்பம் குறைந்துபோகிற காரியங்களைத் தொடங்காமலிருப்பதே நன்று.
 • போலியான வாக்குறுதி நம்பிக்கை துரோகத்தின் மறு வடிவம்.
 • அறிவுரை சொல்வதுகூட ஒருவகையில் பழிவாங்கல்தான்!
 • உன் மரணம் எத்தனை பேருக்கு மீளாத் துயரைத் தருகிறதோ….அதை வைத்தே நீ வாழ்ந்தாயா, பிழைத்தாயா? என்பதை கணக்கிட முடிகிறது.
 • உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் இறைவனிடம் நேரடித் தொடர்பு உள்ளது..ஓர் உயிரினம் ஒவ்வொரு விநாடியும் செய்கின்ற அனைத்து நடவடிக்கைகளும் இறைவனிடம் அந்த நொடியே போய்ச் சேர்ந்துவிடுகிறது. இதற்கு உதாரணமாக செல்போன் சேவை. 
 • தேடுதலும், பகிர்தலும் இல்லாத திறமைசாலிகளின் வாழ்க்கை எவராலும் பயன்படுத்தாத நறுமணம் மிக்க பூக்களுக்கு சமம். அவர்கள் எத்தனை அறிவுத்திறன் மிகுந்து காணப்படினும், எவருக்கும் பயன்கொடுக்க மாட்டார்கள்.
 • மருந்துகளும், நம்பிக்கையும், ஆறுதலும்தான் நோயைக் குணப்படுத்துகின்றன..அதற்கான கட்டணத்தை மருத்துவர்கள் பெற்றுக்கொள்கிறார்கள்! 
 • எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமைவது மரணம் மட்டுமே!
 • ஆழ்மனதிற்குள் மரணம் பற்றிய தேடுதல் எட்டும்போது, பற்றற்ற நிலைக்கு பயணப்படுகிறோம்.
 • நமக்குப் பிடித்த ஒன்று எதிர்பாராமல், எவ்வித முயற்சியும் செய்யாமல் கிடைத்துவிடும்போது, அதை அதிர்ஷ்டம் என அழைப்பதில் தவறில்லை.
 • உன் மரணம் எத்தனை பேருக்கு மீளாத் துயரைத் தருகிறதோ….அதை வைத்தே நீ வாழ்ந்தாயா, பிழைத்தாயா? என்பதை கணக்கிட முடிகிறது.

திரைக்கதையில் வரக்கூடிய காட்சிகளை ஷாட் பிரித்தல்

27

ஒரு காட்சியை

பல துண்டுக் காட்சிகளாப் பிரித்தல்

ஒரு திரைப்படத்தில் காட்சிப்படுத்தலும், ஒளிப்பதிவும், காட்சிக்கான நம்பகத்தன்மையும் சிறப்பாக அமையவேண்டும் என்பதற்காக ஒரு காட்சியை பல காட்சிகளாக பிரித்து படமாக்குவார்கள். எடிட்டிங்கில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது. அதென்ன…ஒரு காட்சியை பல காட்சிகளாக பிரித்து படமாக்குதல்? சினிமா தயாரிப்பில் இதன் பெயர் ஷாட் பிரித்தல்.

ஆறு வயது முதல் எட்டு வயது வரையிலுமான பதினைந்து சிறுவர்கள் பயணித்துக்கொண்டிருக்கும் பள்ளிக்கூட வேன் ஒன்று இரு தீவிரவாதிகளால் கடத்தப்படுகிறது.

இது ஒரு சினிமாவின் ஓபனிங் காட்சி என்பதாக வைத்துக் கொள்வோம்.

இப்போது இந்த ஒற்றை வரி திரைக்கதையை பகுதி பகுதியாகப் பிரித்து பல காட்சிகளாக படம்பிடிக்க வேண்டியதிருக்கும். இதைத்தான் ஷாட் பிரித்தல் என்கிறார்கள். இந்தக் காட்சியை எப்படி ஷாட் பிரித்தால் ஒளிப்பதிவும், காட்சிப்படுத்தலும் நன்றாக அமையும்? அதுவும் வசனமே இல்லாமல்?

பள்ளிக்கூட வேன் ஒன்று சென்றுகொண்டிருக்கிறது.
கட்
அந்த வேனிற்கு முன்பும் பின்பும் பலதரப்பட்ட வாகனங்கள் பயணித்துக்கொண்டிருக்கின்றன.
கட்
வேனிற்குள் உள்ள சிறுவர்களின் முகபாவணைகள் மற்றும் சைகைகள்.
கட்
ஒரு சிறுவன் தன் கையிலுள்ள சாக்லெட்டை பிய்த்து தனக்கு அருகிலுள்ள நண்பனுக்குக் கொடுக்கிறான்.
கட்
இதைக் கவனிக்கும் இன்னொரு சிறுவன் தனக்கும் தரும்படி கையை நீட்டுகிறான்.
கட்
சாக்லெட் சிறுவன் தரமாட்டேன் என்பதுபோல் தலையை ஆட்டிச் சொல்கிறான்.
கட்
சாக்லெட் தானம்பெற்ற சிறுவன் தன் பங்கிலிருந்து கொஞ்சம் பிய்த்து கைநீட்டிய சிறுவனுக்கு கொடுக்கிறான்.
கட்
சாக்லெட் சிறுவன் அவன் கையிலுள்ள மீதியைப் பிடுங்குகிறான்.
கட்
அவர்களுக்குள் சின்ன சண்டை.
கட்
இடது புறம் உள்ள சிறிய சாலையில் வேன் திரும்புகிறது.
கட்
அந்தச் சாலையில் போக்குவரத்து சுத்தமாக இல்லை.
கட்
அகலம் குறைவான மேடுபள்ளமான சாலை என்பதால் வேன் மெதுவாக செல்கிறது.
கட்
200 மீட்டர் தொலைவில் இரண்டு தீவிரவாதிகள் (சாதாரண உடையுடன்) ஏதோ சிந்தனையுடன் சாலையோரத்தில் நிற்கிறார்கள்.
கட்
தீவிரவாதிகளில் ஒருவன் தூரத்தில் வரும் வேனை பார்க்கிறான்.
கட்
மற்றவனிடம் ஓ.கே என்பதுபோல் கண்களால் சைகை செய்கிறான்.
கட்
அவனின் சைகையைப் புரிந்துகொண்ட மற்ற தீவிரவாதியும் வேனைப் பார்க்கிறான்.
கட்
பெரியவர் ஒருவர் வேனிற்கு எதிர்புறமாக சைக்கிள் ஓட்டிக்கொண்டு வேனைக் கடந்து போகிறார்.
கட்
வேனைக் கடந்துபோகையில் அவரின் தோள்மேல் ஒரு சாக்லெட் துண்டு விழுகிறது.
கட்
பதற்றத்தில் சைக்கிளிலிருந்து இறங்குகிறார்.
கட்
தோளில் ஒட்டிக்கொண்டிருக்கும் ஈரமான சாக்லெட் துண்டை எடுக்கிறார்.
கட்
ஒரு சிறுவன் வேனிலிருந்து தலையை வெளியே நீட்டி எட்டிப்பார்க்கிறான்.
கட்
சைக்கிளில் வந்த பெரியவர் தன் கையிலுள்ள ஈரமான சாக்லெட் துண்டை விரல்களால் நசுக்கியபடியே வெளியே தலைநீட்டும் சிறுவனைக் கவனிக்கிறார்.
கட்
ஐம்பது மீட்டர் தூரத்தில் வேன் வந்துகொண்டிருக்கிறது. இரு தீவிரவாதிகளும் உஷாராகிறார்கள்.
கட்
சைக்கிள் பெரியவர் உற்றுப் பார்ப்பதால் தலைநீட்டிய சிறுவன் உள்ளே தலையை இழுத்துக்கொள்கிறான்.
கட்
பெரியவர் தன் தலையில் அடித்துக்கொள்கிறார்.
கட்
பள்ளிக்கூட வேன் தீவிரவாதிகளுக்கு முப்பது மீட்டர் தொலைவில் வருகிறது.
கட்
ஒரு தீவிரவாதி சரவெடியைக் கொளுத்தி வேனிற்கு முன்பாகப் போடுகிறான்.
கட்
வெடிகள் வெடித்துச் சிதறுகின்றன.
கட்

வேனிற்குள் உள்ள குழந்தைகளில் சிலர் பயத்தில் காதைப் பொத்துகின்றனர்.
கட்
சில குழந்தைகள் வெடிச் சிதறல்களை வெளியே தலைநீட்டி ஆச்சரியமாகப் பார்க்கின்றனர்.
கட்
வேன் டிரைவர் பதற்றத்தில் பிரேக்கை அழுத்துகிறார். வேன் நிற்கிறது.
கட்
சாலையில் பட்டாசு புகை மண்டலம்.
கட்
இந்தச் சமயத்தில் தீவிரவாதிகள் இருவரும் வேனுக்குள் ஏறுகின்றனர்.
கட்
திரைக்கதையில் வரக்கூடிய காட்சிகளை ஷாட் பிரித்தல்

இவை அனைத்தையும் சைக்கிள் பெரியவர் கவனிக்கிறார்.
கட்
வேனுக்குள் இருவர் ஏறுவதை புகை மண்டலத்தில் டிரைவர் கவனிக்கிறார்.
கட்
ஒரு தீவிரவாதி இடுப்பில் உள்ள துப்பாக்கியை எடுத்து கண நேரத்தில் டிரைவரை சுட்டு வீழ்த்தி வேனுக்குள்ளேயே சாய்க்கிறான்.
கட்
குழந்தைகள் அலறுகின்றனர்.
கட்
இப்போது வேன் டிரைவரை துப்பாக்கியால் சுட்ட தீவிரவாதி வேனை ஓட்டத் தொடங்குகிறான்.
கட்
இன்னொரு தீவிரவாதி தன் வாயில் ஆட்காட்டி விரல் வைத்து உஷ்ஷ்….என்பதுபோல் குழந்தைகளைப் பார்த்து சொல்கிறான்.
கட்
குழந்தைகளின் முகத்தில் பீதி.
கட்
அந்தத் தீவிரவாதி திறந்திருக்கும் வேன் ஜன்னல்களை மூடுகிறான்.
கட்
சைக்கிள் பெரியவர் முகத்தில் ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்கிறது என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.
கட்
வேனை ஓட்டும் தீவிரவாதி கியரை மாற்றுகிறான். வேனின் வேகம் அதிகரிக்கிறது.
கட்

இப்படியாக ஒரு வரித் திரைக்கதை குறைந்தபட்சம் 43 துண்டுக் காட்சிகளாக பிரித்துக்கொள்ளப்படும்போதுதான், ஒளிப்பதிவு சிறப்பாக அமைவதற்கும், காட்சிப்படுத்தல் சிறப்பாக அமைவதற்கும் வழி பிறக்கும்.

அதை விடுத்து ஷாட் பிரித்தலில் தவறு நேரும்போது காட்சிப் பிழை, ஒளிப்பிழை ஏற்படுவதற்கு இடம்கொடுத்துவிடுகிறோம்.

திரைக்கதை தெளிவாக இருந்தால் இந்த ஷாட் பிரித்தலின் பெரும்பகுதி திரைக்கதையிலேயே வந்துவிடும். நம் தமிழ்ச் சினிமாக்களில் இயக்குனர்களே திரைக்கதையை எழுதிவிடுவதால், கூடுமானவரை ஒரு வரித் திரைக்கதையாகவே எழுதி வைத்துக்கொள்கிறார்கள். படப்பிடிப்புத் தளத்தில் உட்கார்ந்து ஷாட்டுகளைப் பிரித்து அதன்பின்னர் படமெடுக்கிறார்கள். இதனால் காலமும் நேரமும் கெடும்.

முழுத் திரைக்கதையும் எழுதி முடித்து, தயாரிப்பாளர் ஓ.கே சொல்லிவிட்டால், படப்பிடிப்புத் தளங்களைத் தேர்வு செய்துவிட்டு, அதன்பின்னர் திரைக்கதைக்கு ஏற்றமாதிரி ஷாட்டுகளை படப்பிடிப்புத் தளத்தின் தன்மைக்கேற்ப பிரித்து எழுதி வைத்துக்கொண்டு ஷூட்டிங் செல்வது நிறைய நேரத்தை மிச்சம் பிடித்துக்கொடுக்கும்.

இதே திரைக்கதையை 43 துண்டுக்காட்சிகளுக்கு மேலாகவும் பிரித்து எழுத முடியும். அது போர் அடிக்கும் என்பதால் இதோடு நிறுத்திவிட்டேன்.

இங்கே குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு துண்டுக் காட்சிகளையும் பல கோணங்களில் ஒளிப்பதிவாளர் படம்பிடிப்பார். ஆக, 43 துண்டுக் காட்சிகளும் 420 காட்சிகளாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதிகபட்சம் பத்து நிமிடம் திரையில் ஓடக்கூடிய காட்சியாக இது இருக்கும்.27

« Older Entries