abiyum anuvum அபியும் அனுவும் – பி.ஆர்.விஜயலட்சுமி

‘ராஜபக்தி’ திரைப்படத்தின் மூலமாக 1937ம் ஆண்டில் நடிகராக அறிமுகமானவர் பி.ஆர்.பந்துலு. அதன் பின்னர் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் மாறி, தமிழ்த் திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்தார். இவருடைய இயக்கத்திலும், தயாரிப்பிலும் வெளிவந்த ‘தங்கமலை ரகசியம்’, ‘சபாஷ் மீனா’, ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’. ‘கப்பலோட்டிய தமிழன்’, ‘பலே பாண்டியா’, ’கர்ணன்’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘இரகசிய போலீஸ் 115’ ஆகிய படங்கள் தமிழ்த் திரையுலகில் இன்றும் பேசப்படுபவை.
1974ம் ஆண்டு இயற்கை எய்திய பி.ஆந்.பந்துலுவின் மகள் பி.ஆர்.விஜயலட்சுமி. தந்தையைப் போலவே இவரும் பன்முக வித்தர். கே.பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான ‘சின்ன வீடு’ படத்தை ஒளிப்பதிவு செய்ததன் மூலமாக ஆசியாவின் முதல் ‘கேமரா வுமன்’ என்கிற சாதனையைப் படைத்த பி.ஆர்.விஜயலட்சுமி, அதன் பிறகு சில படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி, 1955ல் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் மற்றும் ரகுமான் இருவரையும் முன்னணி பாத்திரமாக வைத்து, ‘பாட்டுப் பாடவா’ என்கிற திரைப்படத்தை இயக்கினார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு இப்போது ‘அபியும் அனுவும்’ என்கிற படத்தை இயக்கி முடித்திருக்கிறார்.
விரைவில் வெளியாகவிருக்கும் ‘அபியும் அனுவும்’ படத்தில் மலையாளத்தின் முன்னணி ஹீரோவாக மாறிக்கொண்டிருக்கும் டோவினோ தாமஸ் நாயகனாகவும் ‘கோ’ படத்தின் மூலமாக அறியப்பட்ட பியா பாஜ்பாய் நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள்.
“நாம் விரும்புகிற, நம்மை நேசிக்கிற மனிதருக்கும் நமக்கும் எத்தனை புரிதல் இருந்தாலும் சில நேரங்களில் நம் ஆளுமைக்கு அப்பாற்பட்ட சூழல்களின் தாக்கத்தால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பெரும் மனச் சுமைக்கு உள்ளாகி, பிரிந்து போகும் நிலை உருவாகிவிடும் என்பதே ‘அபியும் அனுவும்’ படத்தின் கதைச் சுருக்கம்” என்பதை இலை மறை காயாக பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார் பி.ஆர்.விஜயலட்சுமி.
“நான் இதுவரை எத்தனையோ பாத்திரங்களில் நடித்திருக்கிறேன். ஆனால், இந்தப் படத்தில் நடிக்கும்போது, எனக்கான கேரக்டரின் தன்மையை உள்வாங்கி நடிப்பதற்கு நிறைய சிந்திக்க வேண்டியிருந்தது. பிறகு, என்னுடைய இயல்புக் குணத்துக்கு ஏற்பவே என் கேரக்டர் இருந்ததைப் புரிந்துகொண்டு, என் இயல்பிலேயே நடித்து முடித்தேன். முதன் முதலாக உணர்வுப் பூர்வமாக நடித்து முடித்த திரைப்படம் ‘அபியும் அனுவும்’ என்றார் நடிகை ரோகினி.
திரையில் :
டோவினோ தாமஸ் (நாயகன் அபி)
பியா பாஜ்பாய் (நாயகி அனு)
மற்றும்
பிரபு, சுஹாசினி, ரோகினி, மனோபாலா, கலைராணி, உதயபானு மகேஷ்வரன், தீபா ராமானுஜம், கவிதாலயா கிருஷ்ணமூர்த்தி, சிந்து ஷாம், சம்யுக்தா, நெல்லை சிவா, கிருஷ்ணா, சங்கீதா, ஆலிவர்.
திரைக்குப் பின்னே :
கதை, திரைக்கதை : உதயபானு மகேஷ்வரன்
வசனம் : கே. சண்முகம்
இயக்கம் : பி.ஆர்.விஜயலட்சுமி
ஒளிப்பதிவு : அகிலன்
இசை : தரண்
பாடல்கள் : மதன் கார்க்கி
படத் தொகுப்பு : சுனில் ஸ்ரீநாயர்
ஆடை வடிவமைப்பு : ஜெயலட்சுமி சுந்தரேசன்
டிசைனர்ஸ் : ஹர்குவாட், ஜெய்ராம் சுந்தரேசன்
மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா
சவுண்ட் டிசைனர் : அந்தோணி பி ஜெயரூபன்
கலை இயக்குநர் : ஷிவா யாதவன்
புகைப்படங்கள் : ஸ்டில்ஸ் ரவி
சவுண்ட் மிக்ஸிங் : தபஸ் நாயக்
தயாரிப்பு மேற்பார்வை : சந்தோஷ் சிவன்
தயாரிப்பு : விக்ரம் மெஹ்ரா, பி.ஆர்.விஜயலட்சுமி