Author Archives: admin

683 views

abiyum anuvum அபியும் அனுவும் – பி.ஆர்.விஜயலட்சுமி

அபியும் அனுவும் abiyum avanum

‘ராஜபக்தி’ திரைப்படத்தின் மூலமாக 1937ம் ஆண்டில் நடிகராக அறிமுகமானவர் பி.ஆர்.பந்துலு. அதன் பின்னர் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் மாறி, தமிழ்த் திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்தார். இவருடைய இயக்கத்திலும், தயாரிப்பிலும் வெளிவந்த ‘தங்கமலை ரகசியம்’, ‘சபாஷ் மீனா’, ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’. ‘கப்பலோட்டிய தமிழன்’, ‘பலே பாண்டியா’, ’கர்ணன்’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘இரகசிய போலீஸ் 115’ ஆகிய படங்கள் தமிழ்த் திரையுலகில் இன்றும் பேசப்படுபவை.

1974ம் ஆண்டு இயற்கை எய்திய பி.ஆந்.பந்துலுவின் மகள் பி.ஆர்.விஜயலட்சுமி. தந்தையைப் போலவே இவரும் பன்முக வித்தர். கே.பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான ‘சின்ன வீடு’ படத்தை ஒளிப்பதிவு செய்ததன் மூலமாக ஆசியாவின் முதல் ‘கேமரா வுமன்’ என்கிற சாதனையைப் படைத்த பி.ஆர்.விஜயலட்சுமி, அதன் பிறகு சில படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி, 1955ல் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் மற்றும் ரகுமான் இருவரையும் முன்னணி பாத்திரமாக வைத்து, ‘பாட்டுப் பாடவா’ என்கிற திரைப்படத்தை இயக்கினார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு இப்போது ‘அபியும் அனுவும்’ என்கிற படத்தை இயக்கி முடித்திருக்கிறார்.

விரைவில் வெளியாகவிருக்கும் ‘அபியும் அனுவும்’ படத்தில் மலையாளத்தின் முன்னணி ஹீரோவாக மாறிக்கொண்டிருக்கும் டோவினோ தாமஸ் நாயகனாகவும்  ‘கோ’ படத்தின் மூலமாக அறியப்பட்ட பியா பாஜ்பாய் நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள்.

அபியும் அனுவும் abiyum avanum

அபியும் அனுவும் abiyum avanum

“நாம் விரும்புகிற, நம்மை நேசிக்கிற மனிதருக்கும் நமக்கும் எத்தனை புரிதல் இருந்தாலும் சில நேரங்களில் நம் ஆளுமைக்கு அப்பாற்பட்ட சூழல்களின் தாக்கத்தால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பெரும் மனச் சுமைக்கு உள்ளாகி, பிரிந்து போகும் நிலை உருவாகிவிடும் என்பதே  ‘அபியும் அனுவும்’ படத்தின் கதைச் சுருக்கம்” என்பதை இலை மறை காயாக பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார் பி.ஆர்.விஜயலட்சுமி.

“நான் இதுவரை எத்தனையோ பாத்திரங்களில் நடித்திருக்கிறேன். ஆனால், இந்தப் படத்தில் நடிக்கும்போது, எனக்கான கேரக்டரின் தன்மையை உள்வாங்கி நடிப்பதற்கு நிறைய சிந்திக்க வேண்டியிருந்தது. பிறகு, என்னுடைய இயல்புக் குணத்துக்கு ஏற்பவே என் கேரக்டர் இருந்ததைப் புரிந்துகொண்டு, என் இயல்பிலேயே நடித்து முடித்தேன். முதன் முதலாக உணர்வுப் பூர்வமாக நடித்து முடித்த திரைப்படம்  ‘அபியும் அனுவும்’ என்றார் நடிகை ரோகினி.

 

திரையில் :

டோவினோ தாமஸ் (நாயகன் அபி)

பியா பாஜ்பாய் (நாயகி அனு)

மற்றும்

பிரபு, சுஹாசினி, ரோகினி, மனோபாலா, கலைராணி, உதயபானு மகேஷ்வரன், தீபா ராமானுஜம், கவிதாலயா கிருஷ்ணமூர்த்தி, சிந்து ஷாம், சம்யுக்தா, நெல்லை சிவா, கிருஷ்ணா, சங்கீதா, ஆலிவர்.

 

திரைக்குப் பின்னே :

கதை, திரைக்கதை : உதயபானு மகேஷ்வரன்

வசனம் : கே. சண்முகம்

இயக்கம் : பி.ஆர்.விஜயலட்சுமி

ஒளிப்பதிவு : அகிலன்

இசை : தரண்

பாடல்கள் : மதன் கார்க்கி

படத் தொகுப்பு : சுனில் ஸ்ரீநாயர்

ஆடை வடிவமைப்பு : ஜெயலட்சுமி சுந்தரேசன்

டிசைனர்ஸ் : ஹர்குவாட், ஜெய்ராம் சுந்தரேசன்

மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா

சவுண்ட் டிசைனர் : அந்தோணி பி ஜெயரூபன்

கலை இயக்குநர் : ஷிவா யாதவன்

புகைப்படங்கள் : ஸ்டில்ஸ் ரவி

சவுண்ட் மிக்ஸிங் : தபஸ் நாயக்

தயாரிப்பு மேற்பார்வை : சந்தோஷ் சிவன்

தயாரிப்பு : விக்ரம் மெஹ்ரா, பி.ஆர்.விஜயலட்சுமி

 

 

 

681 views

பதுங்கி பாயனும் தல – pathungi payanum thala

‘பதுங்கி பாயனும் தல’ எனும் மாறுபட்ட தலைப்புடன் திரைத்துறைக்குள் களமிறங்கியிருக்கிறார்  ‘மீடியா பேஷன்’ தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ஆமீனா ஹீசைன். படத்தை இயக்கியிருப்பவர் எஸ்.பி.மோசஸ் முத்துப்பாண்டி.

தமிழ்த் திரைப்படத்தில் நகைச்சுவை படங்களுக்கு எப்போதுமே தனி மவுசு உண்டு. இதைக் கவனத்தில் கொண்டு முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து ‘பதுங்கி பாயனும் தல’  படத்தை இயக்கியிருக்கும் அறிமுக இயக்குநர் எஸ்.பி.மோசஸ் முத்துப்பாண்டி, இந்தப் படத்தில் ‘மாமனா மச்சானா’ என்கிற பாடலையும் எழுதியிருக்கிறார். நடிகர் விஜய் சேதுபதியால் சில மாதங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட ‘மாமனா மச்சானா’ பாடலின் சிங்கிள் ட்ராக் முகநூலில் மட்டும் பத்து லட்சத்திற்கும் மேற்பட்டவர்களால் ரசிக்கப்பட்டிருக்கிறது.

‘பதுங்கி பாயனும் தல’ படத்தின் இயக்குநர் எஸ்.பி.மோசஸ் முத்துப்பாண்டி  அறிமுக இயக்குநர் என்றாலும், படப்பிடிப்பு நாட்களையும், அதற்குத் தகுந்த திட்டங்களையும், அதற்கான வியூகங்களையும் மிகச் சரியாகக் கணக்கிட்டு படப்பிடிப்பை நடத்தியதால், 53 நாட்களில் முடிக்க வேண்டிய படப்பிடிப்பை 45 நாட்களிலேயே முடித்து, தயாரிப்பாளருக்கு பணத்தை மிச்சம் செய்து கொடுத்திருப்பது, அவருடைய திட்டமிடலுக்கும், உழைப்புக்கும் கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.

இயக்குநர் சீமானிடம் உதவி இயக்குநராகவும், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் இணை இயக்குநராகவும் களப் பயிற்சி எடுத்தவர் எஸ்.பி.மோசஸ் முத்துப்பாண்டி.

விரைவில் வெளியாகவிருக்கும்  ‘பதுங்கி பாயனும் தல’ ரசிகர்களின் வயிறுகளை குலுங்கச் செய்து வலிக்கச் செய்யும் என்கிறது படக்குழு.

திரையில் :

நாயகன் – மைக்கேல்

நாயகி – நைனிகா

மற்றும்

வேல ராம மூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், சிங்கம்புலி, ஆர்.என்.ஆர்.மனோகர், சிங்கப்பூர் தீபன், ராகுல் தாத்தா, ஹலோ கந்தசாமி.

 

திரைக்குப் பின்னால் :

இயக்குநர் – எஸ்.பி.மோசஸ் முத்துப்பாண்டி

ஒளிப்பதிவு – கே.ஏ.ரோவின் பாஸ்கர்

இசை – வல்லவன் சந்திரசேகர்

படத்தொகுப்பு – டி.மனோஜ்

பாடல்கள் – ஞானகரவேல்

நடன இயக்குநர்கள் – நோபல், பாபா பாஸ்கர், பேபி ஆண்டனி, கேசவ்

சண்டைப் பயிற்சி – ஸ்டன்னர் ராம்

கலை இயக்குநர் – ரவீஷ்

டிசைன் – சிந்து கிராபிக்ஸ்

மக்கள் தொடர்பு – வின்சன் சி.எம்.

 

 

pathungi payanum thala - பதுங்கி பாயனும் தல

pathungi payanum thala – பதுங்கி பாயனும் தல

662 views

கரு – karu

karu - கரு

‘வனமகன்’ படத்திற்குப் பிறகு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவான ‘கரு’ திரைப்படத்தை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ சுபாஷ்கரன் தயாரித்திருக்கிறார். இந்தப் படத்தின் வேலைகள் துவங்கப்பட்டதிலிருந்தே நிறைய பிரச்னைகள். படத்தின் தலைப்பு தனக்கானது என ஜெ.எஸ்.ஸ்கிரீன்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மணிமாறன், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, படத்தை வெளியிடுவதற்கு தடையுத்தரவு பெற்றிருந்தார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையின் இறுதித் தீர்ப்பில் ‘கரு’ படத்தை வெளியிட தடையில்லை என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதைத் தொடர்ந்து, படக்குழுவினர் வெளியீட்டு வேலைகளை துவங்கிவிட்டனர்.

 

karu - கரு

karu – கரு

 

இதைத் தொடர்ந்து படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிப்ரவரி 24ம் தேதி நடைபெற்றது. அப்போது விழாவில் பேசிய இயக்குநர் ஏ.எல்.விஜய் “என்னுடைய சினிமா கேரியரில் ‘கரு’ முக்கியமான படமாக இருக்கும். 2013ம் ஆண்டிலேயே எழுதி முடித்துவிட்ட இந்தப் படத்தின் கதையை லைகா நிறுவனத்தாரிடம் சொன்னேன். படத்தை எப்போ பண்ணாலும் எங்களுக்கு தான் பண்ணனும் என்று கூறினார்கள்.

இந்தப் படத்தின் நாயகியாக நடிக்க சாய் பல்லவியை அணுகினோம். அவர் நிறைய படங்களை நிராகரித்துக் கொண்டிருந்த நேரத்தில், நாங்களும் அவரை இந்தப் படத்துக்காக அணுகியதால், முதலில் மறுத்து விட்டார். பின்னர் முழுக் கதையையும் அவருடைய அம்மாவிடம் சொல்லி அவரை சம்மதிக்க வைத்தோம். படத்தின் பெரிய பலமே நாயகி சாய் பல்லவி தான். நிச்சயமாக மிகப்பெரிய நடிகையாக வருவார்” என்றார்.

கருக் கலைப்பை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இந்தப் படம் ’கனம்’ எனும் தலைப்பில் தெலுங்கிலும் வெளியாகவிருக்கிறது. படத்திற்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

617 views

கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ

தமிழக மக்களால் புரட்சித் தலைவர் என அழைக்கப்பட்ட எம்.ஜி.ஆரும், புரட்சித் தலைவி என அழைக்கப்பட்ட ஜெயலலிதாவும் சேர்ந்து 28 திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள். இப்போதைய காலகட்டத்திற்கு ஏற்ப எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் மீண்டும் சேர்ந்து ஒரு திரைப்படத்தில் நடித்தால் எப்படி இருக்கும் என்பதை ஊகித்து,  ‘வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ பட நிறுவனம் சார்பாக, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ’ என்கிற படத்தை அனிமேஷன் முறையில் தயாரிக்கிறார்.

 

கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ

கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ

 

‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தைத் தொடர்ந்து ‘கிழக்கு ஆப்பிரிக்காவின் ராஜூ’ என்கிற படத்தைத் தயாரிக்க எம்.ஜி.ஆர் விருப்பமாக இருந்தார். அரசியல் காரணங்களால் அந்தப் படத்தை அவரால் தயாரிக்க முடியாமல் போய்விட்டது. எனவே, எம்.ஜி.ஆரின் கனவுப் படமாக இருந்த ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ’ இன்றைய காலத்திற்கேற்ற திரைக்கதையோடு  மீண்டும் உருவாக இருப்பது, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ரசிகர்களுக்கு மட்டுமல்ல, தமிழ்த் திரையுலகத்திற்கும் புதிய தீனியாக இருக்கும்.

“இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருடன் 25 படங்களில் நடித்த என்னுடைய தந்தை ஐசரி வேலன் முக்கிய வேடத்தில் அனிமேஷன் முறையில் நடிக்கிறார். மேலும், எம்.ஜி.ஆருடன் நடித்த நாகேஷ், நம்பியார் போன்றவர்களும் அனிமேஷன் முறையில் நடிக்கவிருப்பது நிச்சயமாக ரசிகர்களிடையே பெரும் ஆதரவு பெறும்.

 

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் இந்த வேளையில், அவருடைய கனவு படைப்பான ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு’ படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில், ‘கிராபிக்ஸ்’சில் தயாரிக்க முடிவு செய்தோம். அதன்படி, எம்.ஜி.ஆரின் பிறந்த நாளான ஜனவரி 17-ந் தேதி, சென்னை சத்யா ஸ்டுடியோவில், ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு’ படத்தின் தொடக்க விழா நடந்தது. அந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு ‘கிளாப்’ அடித்தார். நடிகர் கமல்ஹாசன் கேமராவை ‘ஆன்’ செய்தார். லதா, சவுகார் ஜானகி, வெண்ணிறை ஆடை நிர்மலா, சச்சு உள்பட எம்.ஜி.ஆருடன் நடித்த நடிகைகள் பலரும் கலந்து கொண்டார்கள். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மற்றும் எம்.ஜி.ஆரிடம் பணிபுரிந்த உதவியாளர்களும் விழாவில் கலந்து கொண்டனர்.

அனிமேஷன் படமாக தயாராகி வரும் ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ’, எம்.ஜி.ஆரின் அடுத்த பிறந்த நாளில், அதாவது 2019-ம் ஆண்டு ஜனவரி 17-ந் தேதி திரைக்கு  ரிலீஸ் ஆகும்.

‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு’ படத்தில் எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் ‘கிராபிக்ஸ்’சில் நடிக்க வைத்து, அவர்களுடைய 29வது படமாக உருவாக்கியிருக்கிறோம். இதற்காக எங்கள் பட நிறுவனம் பெருமைப்படுகிறது. எங்களோடு இணைந்து ‘பிரபுதேவா ஸ்டூடியோஸ்’ நிறுவனமும் இந்தப் படத்தை தயாரிக்கிறது”  என்றார் படத்தின் தயாரிப்பாளரான ஐசரி கணேஷ்.

839 views

கருப்பி சிறுகதைத் தொகுப்பு – karupi story book

கருப்பி

கருப்பி

 

இதை மாமை நிறத்தினள் என்பதா? அல்லது கரும்புச் சுவையினள் என்பதா? ‘கறுப்பி’ என்றும் எழுத முடியாது, அது காத்துக் கறுப்பு என்னும் அர்த்தச்சாயலைத் தந்துவிடும். கருப்பி என்றது சரிதான். ஆனால், அதை நிறமாக அல்லாமல் சுவையாகக் கொள்கிறேன்.

கருப்பி

karupi

ஒரு புத்தகத்தில் தலைப்புக் கதையை முதலில் வாசிப்பது வழக்கம் எனக்கு. கடைசிக் கதை அடுத்து; முதற்கதை அப்புறம். மற்ற கதைகளை, முன்னொன்று பின்னொன்று என்று வாசித்து முடிப்பேன். முதல் மூன்று கதைகளை வாசித்ததும் இடைவேளை எடுப்பேன். அதில் என்ன செய்வேன் என்பது இங்கே முக்கியமில்லை. படைப்புகள் தரும் இன்னொரு, அல்ல அல்ல, வேறுவேறு உலகங்கள், வாழ்க்கைகளை ஒப்பிட ஒரு வாசகனின் அக்கடாக்கள் முக்கியமா என்ன?

 

இடைவேளை முடிந்து, முன், அணி, பதிப்பு உரைகள் இல்லாத இந்தப் புத்தகத்தின் பின்னட்டை விளம்பல் வரிகளை வாசித்தேனா, ‘தினமலர்’ டி.வி.ஆர். நினைவுச் சிறுகதைப் போட்டியில் இவருடைய ‘செகண்ட் ஷோ’ பரிசு வென்றதாகக் கண்டிருந்தது. அதனால், அந்தக் கதையை வாசித்தேன்.

 

 

இன்றைக்கு, பிரியமான ஒரு பிள்ளை, ‘நல்லா இருக்கு’ என்றதே என்று, ‘அஞ்சு சுந்தரிகள்’ மலையாளப் படம் பார்க்கப்போய், ஒரு பிள்ளை வெட்சி (Pedophilia) அதில் வரக்கண்டு, மிரண்டு, படம் பார்ப்பதைப் பாதியிலேயே விட்டுவிட்டேன்.

 

போலவே, ‘பெண்ணியம்’ வரக்கண்டாலும் மிரண்டு போவேன். சொந்த அடிபாடு. முதற்கதை ‘காஃபி’யில் ‘சாவினிஸ்ட்’ என்றொரு வார்த்தை வருகிறது, அப்படி ஆவதற்கும் தெம்பில்லாத ஆள் நான். ‘செகண்ட் ஷோ’, ஆமாம், பெண்ணியக் கதை. அந்த ஷோவில் பார்க்கப்பட்ட படமும் ‘இறைவி’யாம்.

 

மிரண்டேன், ஆனால் வாசிப்பை பாதியிலேயே விட்டுவிடவில்லை. காரணம், முதலில் வாசித்த மூன்று கதைகள்.

‘கருப்பி’ ஓர் இரண்டுங்கெட்டான் காதல் நகைச்சுவை. ‘நிம்மதி’ ஒரு கற்பியல் (மண வாழ்க்கை) காதல் அருமை! ‘காஃபி’ (என்ன ஒரு தலைப்பு!) நாவில் தங்கிப்போன, இன்னதென்று அறியமுடியாத கசப்பென்றும் சொல்லமுடியாத ஒரு சுவை.

 

மொத்தம் ஒன்பது கதைகள். ஒன்றும் சோடையில்லை, ‘செகண்ட் ஷோ’வையும் சேர்த்துத்தான். பெண்களாகிய அவர்கள் நியாயம் அவர்களுக்கு. வீட்டுவேலை விளிம்பு நிலை மனிதர்கள் (‘இருள்’), ஆளுக்கொரு கார்வைத்திருப்பவர்கள் (‘சைக்யாட்ரிஸ்ட்’), கிராமத்து ஆள்கள் (‘கிறக்கம்’) என, சமூகப் படிநிலைகளின் அனைத்துவகை மனிதர்களும், கிட்டத்தட்ட, இந்தக் கதைகளில் வருகிறார்கள். எழுத்தாளரது கவனிப்பின் ஆழம், பரப்பு  இப்படி.

 

 

அருணா ராஜ் அவர்களை முகாமுகமாக அறிந்தவன் இல்லை நான். பல் மருத்துவர் அவர் என்று தெரிகிறது. முகநூலில் என் நட்புகளில் ஒருவராக இருக்கிறார். நகைச்சுவையாக அவர் இடும் பதிவுகள் கண்டு, எழுத்தாளுமை வியந்து, என் நெருங்கிய நட்புகளில் ஒருவராக்கி வாசித்து வருகிறேன்.

 

 

பெண் எழுத்தாளர்கள் ஆண் குணவார்ப்புகளை, ஆண் எழுத்தாளர்கள் பெண் குணவார்ப்புகளை எப்படிப் படைத்திருக்கிறார்கள் என்று கவனித்து வாசிப்பது எனக்கு வழக்கம். அந்த வகையில், அருணா ராஜ், ஒரு பெண் எழுத்தாளராக, ஆண் குணவார்ப்புகளை (‘காஃபி’யில் அந்த பெயர் தெரியாமலே விலகிவிட்ட இளைஞன், ‘டியர்’ குடிகார குடும்பத் தலைவன், ‘கிறக்கம்’ காளி, ‘மனக்கிணறு’ அப்பா, ‘சைக்கியாட்ரிஸ்ட்’ மருத்துவர், ‘நிம்மதி’ நாயகனும் அப்பாவும்) துல்லியமாகவே வார்த்திருக்கிறார்.

 

 

காதலும் அக்கறையும் இவரது கதைப்பொருள்களாக வெளிப்பட்டு இருக்கின்றன. முகநூல் பதிவுகளில் காணக்கிடக்கிற நகைச்சுவை இந்தக் கதைகளில் அவ்வளவாக இல்லை. ‘இருள்’ என்னும் இருண்ட கதையில், தன் வித்யானுபூதியை நக்கலடித்து நகைச்சுவை ஆக்கியிருக்கிறார். ‘கருப்பி’ நாயகன் கதிரும் ஒரு நகையாடல்.

 

சிறந்த கதை என்று எதைச் சொல்வது? ‘நிம்மதி’ அவ்வளவுக்குப் பிடித்திருந்தது. ‘காஃபி’ வாசித்தபோது அதுவும். ‘கிறக்கம்’ வாசித்து அதுதான் உச்சம் என்று எண்ணினேன். அதில், அந்தக் கொல்லை (எழுத்தாளர் நாட்டுவழக்கில் கொல்லி) காட்சியில் வெட்டி, முடிவில் பண்ணையாள் செல்வம் வாய் வார்த்தையாக அதை ஒட்டியதை வியந்தேன். மற்ற கதைகளும் சிறந்தவைகளே, அக்கறை காரணமாக .

 

இந்த நூலில், வரைந்தவர் யாரென்று தெரியவில்லை, அழகான அர்த்தமுள்ள ஓவியங்கள் இடம்பெற்று இருக்கின்றன. அவரை வாழ்த்துகிறேன்!

 

முப்பது ஆண்டுகளாக கார் ஒட்டுகிறேன், எங்கள் பாப்பாவுக்கும் சற்றிப்போதுதான் கற்றுக்கொடுத்தேன். ஓட்டுநர் இருக்கையை எவ்வளவு இடைவெளி விட்டுப் பொருத்துவது என்று அறியாமல் இருந்தேன். ‘காஃபி’ கதைவழியாக அதைக் கற்றுக் கொடுத்தமைக்கு எழுத்தாளர்க்கு நன்றி.

 

இன்றைக்கு நேரம் கிடைத்ததால், புத்தகம் கைக்கு வந்தவுடன் வாசிக்க முடிந்தது. நேரம் கிடைத்ததால் (‘டியர்’, ‘இருள்’ கதை நீதிகள் மன்னிக்க!) இடைவேளையில், டீக்கு பதிலாக பிராந்தி எடுக்க முடிந்தது.

 

  • ராஜா சுந்தர்ராஜன்

 

கருப்பி

ஒரு மழை நாளில், கையில் காஃபியும், ‘கருப்பி’யும்.

எழுத்தாளர் அருணா ராஜின் சிறுகதைத் தொகுப்பு. ‘காஃபி’ முதல் ‘நிம்மதி’ வரை, மொத்தம் ஒன்பது கதைகள்.

ஆண்-பெண் உறவு சிக்கல்களை தட்டையாகப் பார்க்காமல், மிக நுண்ணிய உணர்வுகளை பிரதிபலிக்கும் ஆழமான எழுத்து.’காஃபி’- நாமே  ஒரு  காஃபிஷாப்பில் பெயரற்ற நண்பனுடன் அமர்ந்து பருகும் அனுபவம்.

‘டியர்’ என்று தொக்கி நிற்கும் அந்த சிறிய வார்த்தை, பாறாங்கல்லை விட அதிகமாக அவனின் நெஞ்சுக்குள் கனக்க ஆரம்பித்தது’ என்று முடிவுக்கு வருகிறது- ‘டியர்’.

உலகமயமாக்கல், பணத்தின், பதவியின் மீதான அதீத ஆர்வம், மனித உறவுகளை எப்படிக் காவு வாங்குகிறது என்று சொல்லிச் செல்கின்றன ‘கிறக்கம்’, ‘செகண்ட் ஷோ’ மற்றும் ‘சைக்கியாட்ரிஸ்ட்’.

மாறிக்கொண்டு வரும் குடும்ப அமைப்பும், அதில் சிக்கும் பெண்ணின்/ஆணின் தனிமனித விருப்பு வெறுப்புகளும், சறுக்கல்களும் கையாளப்படும் விதம் அருமை.

‘மனக்கிணறு’ மற்றும் ‘நிம்மதி’யில் வரும் முதிய அப்பாக்கள் பாத்திர வடிவமைப்பு இயல்பாக, அழுத்தமாக இருக்கிறது. ‘கருப்பி’ க்ளாஸ் கதை. கதிர்கள் மாறாமல் இருக்கும் உலகில், கருப்பிகள் வளர்ந்து கொண்டே செல்கிறார்கள். மொத்தத்தில், அருமையான வாசிப்பு அனுபவம்.

  • நிவேதிதா லூயிஸ்

கருப்பி

யோஹான் பதிப்பகம்,

46, வீரப்பநகர் 4-ஆவது தெரு,

கிருஷ்ணகிரி – 635 001

விலை ரூ.120

 

 

2,566 views

Ponniyin Selvan Screenplay In English-Ponniyin selvan script

PONNIYIN SELVAN

Story & Dialogue : The  Celestial Legend Mr.KALKI
Screenplay & Dialogue : THENNAADAN
Translated by : KALAIVAANI MANAVAALAN (a) Vaalarivan  Kumar Ayya

vanthiya devan

Scene – 1

Day/Int/Ext

Location : Kanchi, the great city

Principal Story Persons : The Prince Aadhitha Karikaalar and Vandhiyathevan

 

The entire gigantic appearance of the very extensive palace.

On the screen, the word “Kaanchi Maa Nagaram”  (Kaanchi ,the Great City) appears and vanishes.

The infrastructural facilities of the palace which glitter like the golden colour…

The pillars, doors, storeys, statues, drawings  etc.,  with the beautiful workmanship…

The internal and external appearance of the various parts which start from the main entrance…

The movement-vision of the royal workers…

The movement -vision of the securities.

The working vision of the body guards.

-CUT-

The room with a  very minute workmanship.

In the room, while the prince Aadhitha Karikaalar is sitting on the throne, in front of him, there stands Vandhiyathevan , the hero of this story, a very handsome and fascinating youth with the broad and expanded shoulders. There a dagger and a sword in the sheaths are hanging on either side of his waist.

In the right hand of Vandhiyathevan, there are two cylindrical  conduits with the length of one foot by having been rolled with a silky cloth.

The prince Aadhitha Karikaalar talk to Vandhiyathevan. In this speech, there remain a carefulness and seriousness.

Aadhitha Karkaalar  —  “ Vandhiyathevan, I know that you are purely a warrior. And I, having felt that you are a good intellectual, entrust this very huge responsibility to  you. In these two palmyra epistles which I have given now to you…,  you should hand over one leaf to my father the Emperor and one another leaf to  my sister Kunthavai. I hear about something else about even the higher and higher officials of the Thanjavoor  Kingdom. So, the message that I have sent should not be known to anybody else. That you are taking the epistles from me shouldn’t be known to anyone what so ever an important person he is. On the way, you shouldn’t fight with anybody else. It is not enough that you are not going for a voluntary fight but that you should not be involved even if anybody comes voluntarily to fight with you. I know well about your bravery. You have proved it so many times. So, there won’t be any disgrace for  you, even if you move away from a voluntary fight. Particularly, you should behave very carefully at the Pazhuvettariyas ( the three governing nobles of that region) and at Madhuraandhagar, the younger brother of my father. They should not know who  you are! It should not strictly be known to them that why you are going!”

Vandhiyathevan  gazes at the eyes of the prince.

Vandhiyathevan —  “ I understand. You have told me about the matter which I should talk to the emperor in person. I return with the success after having fulfilled your willingness.”

The prince Aadhitha Karikaalar looks at Vandhiyathevan.

Vandhiyatheven — “ Bless me….!”

He bows his head down before the prince.

Vandhiyathevan leaves out of that room.

The prince Aadhitha karikaalar notices his departure , by having been seated on his throne.

 

-CUT-

The securities who  stand outside the room with their javelin and rod show yet more stiffness when Vandhiyathevan leaves out.

-CUT-

The very big surrounding campus of the palace…

The  moving persons…

Vandhiyathevan  comes with his heroic walk towards the horse which stands under a tree. He takes in hand the javelin which has been let be hanging vertically along with the body of the horse. He very easily jumps and mounts on the horse. Holding the javelin in his right hand, he operates the horse by knocking at the belly region of the horse. It comes on running slowly and approaches the entrance of the palace.

-CUT-

The body guards and the securities yield a way to him at the door with politeness, Vandhiyathevan leaves out of the palace entrance.

-CUT-

Now the speed of the horse increases slowly up. The long hair of Vandhiyathevan spreads out and flies in the facing air. He increases the speed  yet more by swaying his head. As the hoofs of the horse compress down on the earth, the particles of the topsoil scatter and disperse away all the four sides.

-CUT-

With the effect of  the background music that indicates the symptom on the possible happening of a very big cyclone, earth quake and Tsunami, the speed of the horse increases more and more and the appearance of Vandhiyathevan gradually vanishes with the horse. The prince Aadhitha Karikaalar has been noticing all these by standing on the terrace that is at the top of the palace.

The wording “PONNIYIN  SELVAN” appears on the screen along with a circumstantial music which you might not have heard off so far.

 

 

 

1,584 views

Kochadaiyaan Vimarsanam in Tamil – கோச்சடையான் விமர்சனம் – 52%

கோச்சடையான் விமர்சனம்

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரை தன் முதல் படத்திலேயே தோற்கடித்திருக்கிறார் இயக்குநர் சவுந்தர்யா.

கோச்சடையானை விமர்சிக்க இந்த ஒற்றை வரி போதும்!

tamil screenplay

”விமர்சிக்க முடியாத பல திரைப்படங்கள் வரும். விமர்சிக்கவேண்டிய படங்கள் அவ்வப்போது வரும். கோச்சடையான் விமர்சிக்கக்கூடாத படம். என்னவோ தெரியவில்லை கோச்சடையானை விமர்சிக்க மனம் ஒப்பவில்லை.

படம் பார்த்து முடிந்தவுடன் நண்பர் ஒருவர் ”படம் எப்படி?” எனக் கேட்டபோது, அவரிடம் நான் சொன்ன பதில் இதுதான்.
”நீர் விமர்சிக்க வேண்டாமய்யா, என்ன கதை? அதையாவது சொல்லும்!” தொந்தரித்துக் கேட்டார்.
வழக்கமான ராஜாக்கள் காலத்து கதைதான்.

கலிங்காபுரி, கோட்டைப்பட்டினம் என ஒன்றுக்கொன்று சளைக்காத இரண்டு நாடுகள். மண் சேர்க்கும் அரசர்களின் ஆசைக்கு பலிகடா ஆகும் படைத் தளபதியாக அப்பா கோச்சடையான் (ரஜினி 1). தந்தை ரஜினியின் மரணத்திற்குக் காரணமான இரண்டு ராஜாக்களையும் பலிவாங்கும் படைத்தளபதியாக மகன் ராணா (ரஜினி 2)
இதற்குள் ஒரு காதல். அம்புட்டுதான் கதை. ஆனால்……

தொழிற்நுட்ப புரட்சியின் பங்களிப்போடு உருவாக்கப்பட்ட கோச்சடையானில் கதை முக்கியமல்ல என்றாலும், அதற்கும் முக்கியத்துவம் கொடுத்து, குழப்பம் இல்லாத திரைக்கதையை வடித்துக் கொடுத்திருக்கிறார் கே.எஸ்.ரவிக்குமார். வசனமும் அவரே.

”எதிரிகளை வெல்ல பல வழிகள் இருக்கு. முதல் வழி மன்னிப்பு, நண்பனை எதிரியாக்கிக்கொள்ளாதே, வேஷம் போடுறவனுக்கு பகல் என்ன இரவு என்ன, சூரியனுக்கு முன்னரே எழுந்தால் அந்த சூரியனையே வெல்லலாம்” என வாழ்வியல் சார்ந்த வசனங்கள் ஏராளம்.

படத்தில் நிஜக் கதைமாந்தர்கள் ஒருவர்கூட கிடையாது. அவர்களின் உருவத் தோற்றங்களை மட்டும் வைத்துக்கொண்டு, கனிணியின் சாகசத்தோடு வென்று காட்டியிருக்கிறார் இயக்குநர் சவுந்தர்யா.

படம் தொடங்கிய முதல் ஐந்து நிமிடம் மட்டுமே கதை மாந்தர்களாக காட்சியளிக்கிற கணினி மாந்தர்கள் நம்மை விட்டு விலகி நிற்கிறார்கள். அதன்பிறகு அப்படியே நம் மனதோடு ஒட்டிக்கொள்கிறார்கள் படம் முடியும்வரை. காரணம், தொழிற்நுட்பம்.

இந்தியச் சினிமாவுக்கு இது புதுசு. பட்ஜெட் இருந்தால் அவதாரையும் மிஞ்சக்கூடிய வகையில் நம்மிடம் அறிவும், தொழிற்நுட்பமும் இருக்கிறது என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார் சவுந்தர்யா.

கதைமாந்தர்களின் கண் அசைவு, நடை போன்றவற்றில் துல்லியமான பாவணைக் குறைகள் இருந்தாலும் அவற்றைப் புறந்தள்ளிவிடுகிறது மனசு. காரணம், படத்தில் காட்டப்பட்டுள்ள பிரம்மாண்டம்.

அரண்மனைக் காட்சிகளிலிருந்து போர்க்கள காட்சிவரை, காட்சிக்கு காட்சி நாம் இதுவரை பார்த்திராதது.

கோச்சடையான் வெளிவருவதில் ஏன் சிக்கல் எனத் தெரியவில்லை. பத்து நாட்களுக்கு முன்பாக வந்திருந்தால், வசூலை அள்ளிக் குவித்திருக்கும் என்றாலும், இப்போதும் அதற்குக் குறையிருக்காது என்று நம்பலாம்.

குடும்பத்தோடு பார்த்து மகிழ, முக்கியமாக குழந்தைகளோடு பார்த்து மகிழவேண்டிய படம்.

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரை தன் முதல் படத்திலேயே தோற்கடித்திருக்கிறார் இயக்குநர் சவுந்தர்யா.

கோச்சடையானின் விமர்சனத்திற்கு இந்த ஒற்றை வரிபோதும்.

மதிப்பெண்கள் 52%

1,578 views

Ponniyin Selvan Screenplay – Ponniyin Selvan Thiraikathai – Scene 5

பொன்னியின் செல்வன்

திரைக்கதை,வசனம் : தென்னாடன்

கதை,வசனம் : கல்கி

fight

காட்சி 5

இரவு  / வெளி

Night/ Ext

சுற்றிலும்  முப்பது அடி உயர மதில் சுவர் கொண்ட அரண்மனை போன்ற பெரிய மாளிகையின் முழுத் தோற்றம்.

இரவு நேரம் என்பதால், கோட்டைச் சுவர்போல் தோற்றமளிக்கும் மதில் சுவர்களில் ஆங்காங்கு தீப்பந்தங்கள் எரிந்து வெளிச்சத்தைக் கொடுத்துக்கொண்டிருக்கின்றன.

CUT

மதில் சுவர்களுக்கு நடுவே இருக்கும் மாளிகையைச் சுற்றிலும் பரந்து விரிந்த காலி இடத்தில், வீரர்கள் சிலர் குதிரையில் போவதும், வருவதுமாய் இருக்கிறார்கள்.

CUT

திரையில் கடம்பூர் சம்புவரையர் மாளிகை என்கிற எழுத்து தோன்றி மறைகிறது.

CUT

இருபது அடி அகலமும், 25 அடி உயரமும் கொண்ட மாளிகையின் பிரம்மாண்ட  நுழைவு வாயில்.

வாயிலின் முகப்பில் இடமும் வலமுமாக இரண்டு வீரர்கள் வீதம் நான்கு வீரர்கள் இடுப்பில் வாளுடன், கையில் வேல் கம்புடன் காவலுக்கு நிற்கின்றனர்.

அவர்களுக்கு அருகில் பெரிய அளவிலான தீப்பந்தங்கள் எரிந்துகொண்டிருக்க, நல்ல வெளிச்சம் இருக்கிறது.

CUT

நுழைவு வாயிலுக்கு சற்று தள்ளி, பத்து அடி உயர விளக்குத் தூண் ஒன்றில் நெருப்பு இரண்டு அடி உயரத்திற்கு எரிந்துகொண்டிருக்கிறது.

CUT

காவல்காரர்களின் முகத்தில் பொறுப்புணர்வு.

CUT

வந்தியத்தேவன் குதிரையில் சுமாரான வேகத்தில் வந்து கொண்டிருக்கிறான். அவனின் பார்வையில் அந்த மாளிகையும், மாளிகையின் மேல் மாடம், கோட்டைச் சுவர்களில் எரிந்துகொண்டிருக்கும் தீப்பந்தங்களின் வெளிச்சமும் தெரிகிறது.

CUT

வந்தியத்தேவனின் குதிரை மாளிகை நுழைவு வாயிலை நோக்கி 100 அடி தூரத்தில் வந்துகொண்டிருக்கிறது.

மாளிகை வாயிலில் காவலுக்கு நிற்கும் வீரர்களின் பார்வையில் வந்தியத்தேவன் குதிரையில் வருவது தெரிகிறது.

CUT

வந்தியத்தேவன் நுழைவுவாயில் முன் வந்து நிற்கிறான்.

காவல் வீரர்கள் அவனை ஏறிட்டுப் பார்க்கின்றனர்.

ஒரு காவலாளி அவனின் குதிரையை மறைத்துக் கொண்டு, அதன் முகக் கயிற்றை பிடித்துக் கொள்கிறார்.

வந்தியத்தேவன் குதிரையில் அமர்ந்தபடியே அந்தக் காவலாளியிடம் பேசுகிறான்.

வந்தியத்தேவன் : “நான் உள்ளே செல்லவேண்டும்’’

காவலாளி : “அழைப்பு கொடுத்த அனைவரும் நேரத்திற்கே வந்துவிட்டார்களே….நீங்கள் யார்?’’

வந்தியத்தேவன் : “நான் கந்தமாறரின் நண்பன்’’

காவலாளி : “உங்களுக்கு பெயரெல்லாம் கிடையாதோ?’’

வந்தியத்தேவன் அந்தக் காவலாளியை உற்றுப் பார்க்கிறான்.

காவலாளி : “எங்கிருந்து வருகிறீர்?’’

வந்தியத்தேவன் : “என் பெயர் வந்தியத்தேவன். தஞ்சை மாநகருக்குச் சென்றுகொண்டிருக்கிறேன். இளவரசர் ஆதித்த கரிகாலரின் எல்லைக்குட்பட்ட வடபெண்ணைக்கரைப் பாசறையில் நானும் சம்பூவரையரின் மகன் கந்தமாறரும் ஒன்றாகச் சேர்ந்து எல்லைக் காவல் புரிந்து கொண்டிருந்தோம். அதன்மூலம் நெருங்கிய நண்பர்களாகவும் மாறினோம்’’

இப்போது இன்னொரு காவலாளி பேசத் தொடங்குகிறார்.

காவலாளி 2 : “நீங்கள் கந்தமாறரின் நண்பர் என்றாலும், அழைப்பு இருந்தால் மட்டுமே மாளிகைக்குள் நுழைய முடியும். இன்று முக்கிய விருந்தாளிகள் பலர் வந்திருக்கிறார்கள். அழைப்பு இல்லாத எவரையும் உள்ளே விடக்கூடாது என எஜமானர் சம்பூவரையரின் கட்டளை. நீ உள்ளே போக முடியாது’’

வந்தியத்தேவன் அந்தக் காவலாளியை உற்றுப் பார்க்கிறான்.

வந்தியத்தேவன் : “ சம்பூவரையரின் ஒரே வாரிசான கந்தமாறனின் நண்பர் எனச் சொல்லியும் இத்தனை அவமரியாதையா?’’

காவலாளி 2 : “நீ கந்தமாறரின் நண்பர் என்று எதை வைத்து உறுதி செய்வது. அழைப்புக் கடிதம் ஏதும் இல்லை. அவரின் நண்பர் எனச் சொல்லிக்கொண்டு யார் வேண்டுமானாலும் மாளிகைக்குள் நுழைந்துவிட முடியாது!’’

வந்தியத்தேவன் அவரை மீண்டும் உற்றுப் பார்க்கிறான். மெல்லிய புன்னகை அவன் முகத்தில்.

வந்தியத்தேவன் : “சரி நான் திரும்பிப் போகிறேன்’’

தன் குதிரையைத் திருப்புகிறான். சற்றுதூரம் போகிறான்.

அவன் போவதையே காவல்காரர்கள் பார்க்கிறார்கள்.

100 அடி தூரம் திரும்பிச் சென்ற வந்தியத்தேவன், இப்போது மீண்டும் மாளிகை வாயில் நோக்கி குதிரையைத் திருப்புகிறான்.

CUT

அவன் பார்வையில் கூர்மை. பின்னணி இசையில் களேபரம்.

தன் உரைவாளை வலது கையில் எடுத்துக் கொள்கிறான்.

குதிரையை கால்களால் ஓங்கித் தட்டி இயக்குகிறான்.

இரண்டே நொடிகளில் குதிரை தன் முழுவேகம் எடுத்து வாயிற்கதவை நோக்கி பாய்ச்சலோடு நெருங்கிவருகிறது.

காவல்காரர்கள் தங்கள் கைகளில் இருக்கும் வேல் கம்பை உயர்த்தியபடியே சுதாரிக்கிறார்கள்.

CUT

முழுவேகத்துடன் காவலாளிகளை நோக்கி வரும் வந்தியத்தேவனின் குதிரை, பத்து அடி உயரத்திற்கு பறந்தபடியே அத்தனைபேரையும் தாண்டுகிறது. இந்தக் காட்சி ஸ்லோமோஷனாய் அமைய, அந்தச் சமயத்தில் வந்தியத்தேவன் வாளைச் சுழட்டியபடியே, இடதும் வலதுமாய் சாய்ந்து, காவலாளிகளின் கையிலிருக்கிற வேல் கம்புகளை தன் வாளைச் சுழற்றிக் கீழே விழச் செய்கிறான்.

ஐந்தே நொடிகளில் வந்தியத்தேவன் குதிரை மாளிகையின் உள்ளே சென்றுவிடுகிறது.

CUT

மாளிகையின் கோட்டைச் சுவரில் இருக்கும் பெரிய முரசு ஒன்றை ஒருவர் ஓங்கி அடிக்கிறார்.

CUT

மாளிகை மதிலின் இன்னொரு புறத்தில் ஒருவர் ஐந்தடி நீளம் கொண்ட ஓர் ஊதியால் ஓங்கி ஓங்கி ஊதுகிறார். அந்தச் சத்தமும் முரசு ஒலிக்கும் சத்தமும் காதைக் கிழிக்கிறது.

பின்னணி இசையில் களேபரத்துடன் கூடிய மாற்றம்.

CUT

வந்தியத்தேவன் தன் வாளைச் சுழட்டியபடியே கோட்டைக்குள் சற்று தூரத்தில் இருக்கும் மாளிகையின் முன்வாசல் நோக்கி வேகமாக முன்னேறுகிறான்.

அப்போது வேகமாக கத்துகிறான்.

வந்தியத்தேவன் : “கந்தமாறா…..கந்தமாறா….கந்தமாறா’’

CUT

வந்தியத்தேவனை இப்போது நான்கு குதிரை வீரர்கள் சுற்றி வளைக்கிறார்கள்.

மாளிகையின் பரந்த முகப்பு பகுதியில் தீப்பந்தங்களின் வெளிச்சத்தில் தன்னைச் சுற்றி வளைத்திருக்கும் குதிரை வீரர்களோடு வாளைச் சுழற்றி வெகு லாவகமாக சண்டை இடுகிறான் வந்தியத்தேவன்.

CUT

வந்தியத்தேவனோடு மோதும் ஒரு குதிரை வீரனின் வாள் இரண்டாக உடைந்து தூரமாய்ப் போய் விழுகிறது.

CUT

தன் குதிரையை லாவகமாகத் திருப்பி தன்னோடு சண்டையிடும் இன்னொரு வீரனின் குதிரையோடு மோத விடுகிறான் வந்தியத்தேவன்.

அந்தக் குதிரை வீரன் தூரமாய்ப் போய் விழுகிறான்.

CUT

மற்ற இரண்டு வீரர்களோடும் வாளைச் சுழற்றியபடியே கடும் சண்டையிடுகிறான் வந்தியத்தவேன்.

முரசு சத்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறது. ஊதல் சத்தமும் தொடர்ந்து கேட்கிறது.

CUT

இப்போது தூரத்தில் இருந்து இருபதுக்கும் மேற்பட்ட குதிரைகளில், கையில் வாளோடு வீரர்கள் வேகமாக, புழுதி பறக்க வந்துகொண்டிருக்கிறார்கள்.

CUT

வந்தியத்தேவன் தன் வாளைச் சுழற்றி, தன்னோடு சண்டையிடும் இரண்டு வீரர்களையும் கீழே விழச் செய்கிறான்.

CUT

மாளிகையின் மேற்புறத்தில் இருந்தபடியே இந்தச் சண்டையை பத்துக்கும் மேற்பட்டவர்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

அதில் ஒருவர் காட்சி 4ல் யானையின் மீது அமர்ந்து வந்த பழுவேட்டரையர்.

CUT

இப்போது இருபதுக்கும் மேற்பட்ட குதிரைகளில் வந்த வீரர்களில் முதலாவதாக வந்தவர் வந்தியத்தேவனைப் பார்த்து அப்படியே குதிரையை நிறுத்துகிறார்.

வந்தியத்தேவன் அந்த வீரனைப் பார்க்கிறான்.

முகத்தில் புன்னகை.

வந்தியத்தேவன் : “கந்தமாறா…தக்க சமயத்தில் வந்தாயடா நண்பனே’’

கந்தமாறன் : “வந்தியத்தேவா….நீயா……’’

கந்தமாறன் தன் குதிரைக்குப் பின்னால் வரும் மற்றவர்களைப் பார்த்து உரக்கக் கத்துகிறான்.

கந்தமாறன் : “நிறுத்துங்கள்….நிறுத்துங்கள்…இவன் என் நண்பன்’’ (சத்தமாக கத்தியபடியே)

அனைத்து குதிரை வீரர்களும் வேகத்தைக் குறைத்து, தங்கள் குதிரையை நிறுத்துகிறார்கள்.

CUT

கந்தமாறன் தன் குதிரையை வந்தியத்தேவனின் குதிரைக்கு அருகே கொண்டு செல்கிறான்.

இருவர் முகத்திலும் புன்னகை.

ஒருவரையொருவர் குதிரையில் அமர்ந்தபடியே கட்டித் தழுவிக் கொள்கிறார்கள்.

கந்தமாறன் மற்ற குதிரை வீரர்களைப் பார்க்கிறான்.

கந்தமாறன் : “நீங்கள் செல்லுங்கள்…இவன் என் நண்பன்’’

குதிரை வீரர்களின் முகத்தில் அலுப்பு. தங்கள் குதிரைகளைத் திருப்பியபடியே வந்த பாதை நோக்கித் திரும்பிச் செல்கிறார்கள்.

CUT

வந்தியத்தேவன் : “மன்னித்துவிடு நண்பனே….இந்த இரவு நேரத்தில் உன்னைத் தொந்தரவு செய்துவிட்டேன். ஆனாலும், உன் வீரர்கள் கோழைகளாகவும், முட்டாளாகவும் இருக்கிறார்கள். என்னைச் சந்தேகிக்கவும் செய்தார்கள். என் வாள் வீச்சு பொறுக்க மாட்டாமல் சரணடையவும் செய்தார்கள்….ஹாஹாஹா’’ (சத்தம் போட்டுச் சிரிக்கிறான்)

கந்தமாறன் வந்தியத்தேவன் சிரிப்பதை ரசிக்கிறான்.

கந்தமாறன் : “நல்லது நண்பா….உன் வீரம் யாருக்கு வரும்?’’

வந்தியத்தேவன் : “உனக்கு வருமே நண்பா’’

கந்தமாறன் : “ஹாஹாஹா….(அவனும் சிரிக்கிறான்)

சிரித்து முடிக்கும் கந்தமாறன் மீண்டும் பேசுகிறான்.

கந்தமாறன் : “நண்பனைக் காண நண்பனிடமே ஏதும் சொல்லிக்கொள்ளாமல் என்ன இது திடீர் பிரவேசம்?’’

வந்தியத்தேவன் : “வந்திருக்கும் விருந்தாளிக்கு முதலில் விருந்தோம்பலைக் கொடுக்கவேண்டும் என உனக்கு நான் சொல்லியா தெரியவேண்டும். நல்ல பசியடா நண்பனே…..முதலில் என் வயிற்றை நிரப்பு. பின்னர் உன் செவிகளை நான் நிரப்புகிறேன்.’’

இருவரும் சேர்ந்து சிரிக்கிறார்கள் : “ஹாஹாஹா…ஹாஹாஹா’

CUT

இவர்கள் சிரிப்பதை மாளிகையின் மேற்புறம் இருக்கும் கூட்டம் பார்த்துக்கொண்டே இருக்கிறது.

CUT

 பழுவேட்டரையரின் முகத்தில் சந்தேகம்.

1,299 views

Ponniyin Selvan Screenplay – Ponniyin Selvan Thiraikathai – Scene 4

பொன்னியின் செல்வன்

கதை,வசனம் : கல்கி

திரைக்கதை,வசனம் : தென்னாடன்

Tamil screenplay image

காட்சி 4

பகல் / வெளி

Day/ Ext

ஒரு கோயிலின் முகப்புத் தோற்றம்.

CUT

ஊடாடும் மக்கள் கூட்டம். பலவகையான கடைகள்.

CUT

ஓரிடத்தில் மட்டும் மக்கள் கூட்டமாக எதையோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

CUT

தலையை ஓரமாக மழித்து முன்குடுமி வைத்திருக்கும் ஒருவர் (பெயர் ஆழ்வார்க்கடியான் வயது 35 இருக்கலாம். சற்றே குண்டாக இருக்கிறார். நெற்றியில் நாமம்), நெற்றி நிறைய திருநீர் அணிந்திருப்பவரிடம் ஏதோ வாக்குவாதம் செய்துகொண்டிருக்கிறார்.ஆழ்வார்க்கடியானின் கையில் பிரம்பு ஒன்று இருக்கிறது.

அவர்களைச் சுற்றிலும் சுமாரான மக்கள் கூட்டம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது.

CUT

சற்று தூரத்தில் குதிரையில் அமர்ந்தபடியே வரும் வந்தியத்தேவன் அந்த இடத்திற்கு எதிர்ப்புறமாக வருகிறான்.

CUT

குடுமிக்காரர் ஆழ்வார்க்கடியான் தீவிரமாக வாக்குவாதத்தில் ஈடுபடுவதும், தன் கையில் உள்ள பிரம்பால் திருநீறு அணிந்திருப்பவரை அடிக்க ஓங்குவதும் வந்தியத்தேவன் கண்களில் படுகிறது. அவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பது இவனுக்குக் கேட்கவில்லை.

குதிரையை நிறுத்தி கீழே இறங்குகிறான். அருகில் உள்ள பெரியவரிடம் பேச்சு கொடுக்கிறான்.

வந்தியத்தேவன் : “அங்கே என்ன தகராறு?’’

பெரியவர் : “அய்யோ….அது வெகுநேரமாக நடந்துகொண்டிருக்கிறது. விஷ்ணு பெரிய கடவுளா, சிவன் பெரிய கடவுளா என ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் பேசி மாய்கிறார்கள். அதை வேடிக்கை பார்க்க ஒரு கூட்டம்’’

வந்தியத்தேவனின் கண்களில் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கும் ஆழ்வார்க்கடியான் தோற்றம் முழுமையாகப் படுகிறது. ஆழ்வார்க்கடியானின் செய்கைகள் வந்தியத்தேவனுக்கு புன்னகையை வரவழைக்கின்றன. இவன் புன்னகைப்பதை அருகில் உள்ள பெரியவர் கவனிக்கிறார். வந்தியத்தேவன் அவரைப் பார்க்கிறான்.

பெரியவர் : “என்ன வீரனே….நீ போய் அவர்களை சமாதானம் செய்யலாமே? அதற்குள் குதிரையில் இருந்து இறங்கிவிட்டாய். உனக்கும் வேடிக்கை பார்க்கத் தோன்றுகிறதோ?’’

வந்தியத்தேவன் : “அரியும் சிவனும் ஒன்னு அதை அறியாதவன் வாயில மண்ணு என நான் சொன்னால் அவர்கள் கேட்கவா போகிறார்கள்’’

வந்தியத்தேவன் பெரியவரிடம் பேசிமுடித்து மீண்டும் அவர்களின் வாக்குவாதத்தைப் பார்க்கிறான்.

CUT

இப்போது, நான்கு வீரர்கள் ஆளுக்கொரு குதிரையில் அமர்ந்தபடியே சற்றுதூரத்தில் வருகிறார்கள்.    அதில் ஒரு வீரன் உரக்க கத்தியபடியே வந்தியத்தேவன் நிற்கும் இடத்தை நெருங்கி வருகிறான்.

குதிரை வீரன் : “ “சூராதி சூரர், வீரப்பிரதாபர், மாறபாண்டியன் படையை வீறுகொண்டு தாக்கி வேரோடு அறுத்த வெற்றி வேல் உடையார், இருபத்து நாலு போர்களில் சண்டையிட்டு, அறுபத்து நான்கு விழுப்புண்களைப் பெற்ற திருமேனியர், சோழநாட்டுத் தனாதிகாரி, தானிய பண்டார நாயகர், இறைவிதிக்கும் தேவர், பெரிய பழுவேட்டரையர் விஜயம் செய்கிறார்! பராக்! பராக்! வழி விடுங்கள், வழி விடுங்கள்!”

வந்தியத்தேவன் அந்த நான்கு குதிரை வீரர்களையும் பார்க்கிறான்.

CUT

ஊடாடும் மக்களும், ஆழ்வார்க்கடியான் வாக்குவாதத்தை வேடிக்கை பார்க்கும் கூட்டமும் அவசர கதியில் சாலையோரம் ஓதுங்கி நிற்கிறார்கள்.

CUT

வந்தியத்தேவனும் தன் குதிரையை இன்னும் ஓரமாக இழுத்து, தானும் சாலையோரமாக நின்றுகொள்கிறான்.

நான்கு குதிரை வீரர்களும் சென்றதைத் தொடர்ந்து முரசு அடித்துக்கொண்டு சிலர் வருகிறார்கள். முரசு சத்தம் காதைக் கிழிக்கிறது.

முரசு அடித்துச் செல்பவர்களைத் தொடர்ந்து பனைமரத்தின் ஓவியத்தை வரைந்த கொடியைத் தாங்கியபடி சிலர் வருகிறார்கள்.

அவர்களைத் தொடர்ந்து கையில் வேல் பிடித்த வீரர்கள் சிலர் கம்பீரமாக நடந்து வருகிறார்கள்.

அவர்களைத் தொடர்ந்து ஒரு யானையின் மீது பெரிய பழுவேட்டரையர் அமர்ந்து வருகிறார். (வயது 60 இருக்கலாம். கருநிற மேனி. ஓர் அரசருக்குரிய தோற்றத்தில் கம்பீரமாக யானையின்மீது அமர்ந்து கடந்துபோகிறார்)

யானையைத் தொடர்ந்து ஒரு பல்லக்கினை சிலர் சுமந்து வருகிறார்கள். வந்தியத்தேவன் அந்தப் பல்லக்கினை கூர்ந்து பார்க்கிறான்.

பல்லக்கினைத் தொடர்ந்து குதிரை வீரர்கள் கையில் வேலோடு வருகிறார்கள். வந்தியத்தேவன் முகத்தில் ஆச்சரியமும், யோசனையும் கலந்து நிற்கிறது.

CUT

காட்சி 2ல் ஏரிக்கரையில் வந்தியத்தேவன் நிற்கும்போது தூரத்தில் வந்த படகுகளையும், ஒரு படகில் பல்லக்கு வந்ததும் இண்டர் கட்டாக வந்துபோகிறது.

CUT

தன்னைக் கடந்து தூரத்தில் செல்லும் பல்லக்கினையும், வீரர்களையும் ஏதோ யோசித்தபடியே வந்தியத்தவேன் பார்க்கிறான்.

CUT

குடுமித் தலையுடன் கூடிய ஆழ்வார்க்கடியான் எதிர்புறமாய் நின்று வந்தியத்தேவனை உற்றுப் பார்க்கிறான்.

ஆழ்வார்க்கடியான் தன்னை உற்று நோக்குவதை வந்தியத்தேவனும் கவனிக்கிறான். பின்னர் ஏதோ யோசனையுடன் வந்தியத்தேவன் தன் குதிரையில் ஏறி அமர்கிறான். குதிரையை இயக்க, அது மெல்ல வேகம் எடுக்கிறது.

CUT

வந்தியத்தேவன் குதிரையில் தூரமாய் சென்று மறைவதை ஆழ்வார்க்கடியான் உற்றுப்பார்த்துக்கொண்டே தன் தலையை மெல்ல ஆட்டுகிறான். அந்தப் பார்வையில் விஷமம் தெரிகிறது.

1,161 views

Vallavanukku Pullum Ayudham Vimarsanam 38%

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் விமர்சனம்

கதையின் நாயகனாக சந்தானம் தூள்குழப்பியிருக்கும் படம்.

Tamil Screenplay

கதை

சிறையிலிருந்து வெளிவரும் சந்தானத்தின் இளைய தாய்மாமனை போட்டுத்தள்ளி, தானும் இறந்துபோகிறார் சந்தானத்தின் அப்பா. அப்போது சந்தானம் தொட்டில் குழந்தை. சந்தானத்தின் தந்தையால் வெட்டப்பட்டு இறந்துபோனவரின் அண்ணன் (மூத்த தாய்மாமன்), தன் தம்பியைக் கொன்றவனின் குடும்பத்தையே அழித்துவிடவேண்டும் என தன் இரண்டு குழந்தைகளோடு அருவாள் முனையில் சபதம் ஏற்கிறார். இனி இந்த ஊரில் இருந்தால் தன் மகனையும் கொன்றுவிடுவார்கள் என சந்தானத்தின் தாய் சென்னையில் குடியேறுகிறார்.

26 ஆண்டுகளுக்குப் பிறகு கதை உடனடியாக நகர்ந்துவிடுகிறது.

அதற்குள் அம்மாவும் இறந்துபோக, அநாதையான சந்தானம், இப்போது பழைய சைக்கிளில் தண்ணீர் கேன் சப்ளை செய்யும் தொழிலாளி. “இனி சைக்கிளில் சப்ளை செய்தால் உனக்கு வேலை இல்லை. உடனே ஒரு குட்டியானை வாங்கு” என முதலாளி சொல்ல, வேலை இழக்கும் சந்தானம் குட்டியானை வாங்குவதற்காக பணத்திற்கு அலைய, தான் பிறந்த ஊரில் தன் அப்பாவிற்கு சொந்தமாக ஐந்து ஏக்கர் நிலம் இருக்கிற தகவல் வந்துசேர்கிறது. அந்த இடத்தை விற்பனை செய்வதற்காக தன் பிறந்த ஊருக்குச் செல்ல, இவரைப் பழிவாங்க 26 ஆண்டுகளாக காத்திருக்கும் வில்லன் குடும்பத்தினரின் வீட்டுக்குள்ளேயே விபரீதமாக அடைக்கலமாகிறார்.

வீட்டில் அடைக்கலமாகியிருப்பது தாங்கள் தேடிக்கொண்டிருக்கும் பகையாளியின் மகன் என்கிற உண்மை வில்லன் கோஷ்டிகளுக்குத் தெரியவந்தாலும் அவர்களால் உடனடியாக சந்தானத்தைக் கொல்ல முடியவில்லை. காரணம்,

வில்லன் குடும்பத்திற்கென ஒரு கொள்கை இருக்கிறது. தன் வீட்டிற்குள் வைத்து யாரையும் இவர்கள் பழிவாங்குவது கிடையாது. வெட்டுக்குத்து, அடிதடி எல்லாம் வீட்டிற்கு வெளியேதான்.

வீட்டுவாசலைத் தாண்டினால் தன்னைக் கொன்றுவிடுவார்கள் என்கிற விஷயம் சந்தானத்திற்கு தெரியவர, அவரும் வாசலைத் தாண்டாதாவறு தகிடுதித்தங்கள் செய்து பிழைக்கிறார். இந்தக் களேபரங்களுக்கு மத்தியில் வில்லனின் மகளுக்கு சந்தானத்தின் மீது காதல் பிறக்க, சந்தானம் பழிவாங்கப்பட்டாரா, காதலியை அடைந்தாரா என்பதை வழக்கமான தமிழ்ச் சினிமா இலக்கண விதிகளுக்கு மீறாமல் படம் காட்டியிருக்கிறார்கள்.

சில காட்சிகளில் மட்டுமே சந்தானம் சிரிக்க வைக்கிறார். சில காட்சிகளில் சிறப்பாக நடிக்கவும் செய்திருக்கிறார். ஆனால், படத்தின் ஆரம்பக் காட்சியிலிருந்து முடிவுக் காட்சிவரை அடுக்கடுக்கான லாஜிக் இடர்பாடுகள் வந்து இம்சை படுத்துவதால், படத்தோடும் கதையோடும் ஒன்ற முடியவில்லை.

கதைக்குத் தேவையில்லாத டம்மிக் காட்சிகளே படத்தை அதிகமாக ஆக்கிரமித்துக் கொள்ள, சீரியஸான ஒரு கதைக்குள் காமடி எப்போது வரும் என்கிற மனநிலையோடு  ஏங்க வைக்கிறார்கள்.

பெரும்பாலான காட்சிகள் வீட்டிற்குள்ளேயே சுற்றிச்சுற்றி வருவது, சந்தானத்தைக் கொல்ல எளிய வழிகள் இருக்கும்போது, அதற்காக வில்லன்கள் பெரிதாக மெனக்கெடுவது, இறுதிக் காட்சியில் அத்தனை அடிவாங்கிய பிறகும் வீறுகொண்டு எழுவது, நாயகியை முறைமாமன் எளிதாக விட்டுக்கொடுப்பது என நிறைய காட்சிகள் சலிப்பைக் கொடுக்கின்றன.

நாயகி ஆஸ்னா சாவேரி அழகாக இருக்கிறார். இறுதிக் காட்சியில் தன் திறமையை வெளிக்காட்டுகிறார். பின்னணி இசையும், பாடல்களும் சுமார் ரகத்திற்கும் கீழே. படத்தின் பிற கதை மாந்தர்கள் நாடக பாணியில் நடிப்பைக் கொட்டியிருக்கிறார்கள். ஒளிப்பதிவு பலம் சேர்த்திருக்கிறது (சக்தி, ரிச்சார்ட் நாதன்).மதிப்பெண்கள் 38%

 

« Older Entries