பழமொழிகள் – அ வரிசை

 • அகல் வட்டம் பகல் மழை.
 • அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
 • அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
 • அகல உழுகிறதை விட ஆழ உழு.
 • அக்காளைப் பழித்து தங்கை அவசாரி.
 • அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.
 • அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.
 • அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.
 • அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?
 • அஞ்சும் மூன்றும் உண்டானால் அறியாப் பெண்ணும் சமைக்கும்.
 • அடி உதவுவதுபோல் அண்ணன் தம்பி உதவமாட்டான்.
 • அடித்தாலும் பட்டுக்கொள்ளலாம், சொல் கேட்க முடியாது.
 • அடக்கமே பெண்ணுக்கு அழகு.
 • அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.
 • அடாது செய்தவன் படாது படுவான்.
 • அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.
 • அடித்து வளர்க்காத பிள்ளையும் முறுக்கி வளர்க்காத மீசையும் வாய்க்கு முன் ஏய்க்கும்.
 • அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம்.
 • அடுத்த வீட்டில் அம்மி நகருதா, ஆட்டுக்கல் நகருதா என பார்க்காதே.
 • அண்ணாமலையாருக்கு அறுபத்துநாலு பூசை, ஆண்டிகளுக்கு எழுபத்துநாலு பூசை.
 • அணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும்.
 • அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது.
 • அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.
 • அத்திப் பூத்தது போல.
 • அதிகாரி வீட்டுக் கோழிமுட்டை குடியானவன் வீட்டு அம்மியை உடைத்ததாம்.
 • அதிர்ந்து வராத புருஷனும், மிதந்து வராத அரிசியும் பிரயோசனமில்லாதவை.
 • அந்தி மழை அழுதாலும் விடாது.
 • அப்பன் அருமை மாண்டால் தெரியும்.
 • அப்பாசுவாமிக்குக் கல்யாணம், அவரவர் வீட்டில் சாப்பாடு.
 • அப்பியாசம் கூசா வித்தை.
 • அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்தடியில் பயம்.
 • அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது.
 • அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா?
 • அன்னப்பிடி வெல்லப்பிடி ஆச்சுது.
 • அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் உதவான்.
 • அன்று எழுதியவன் அழித்து எழுதுவானா?
 • அன்பு இருந்தால் அனைத்தும் ஆகும்.
 • அப்பியாச வித்தைக்கு அழிவில்லை.
 • அழுத பிள்ளை பால் குடிக்கும்.
 • அரைக் காசை ஆயிரம் பொன்னாக்குவாள். ஆயிரம் பொன்னை அரைக்காசாக்குவாள். அவள்தான் பொன்ஞ்சாதி.
 • அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது.
 • அருகம் கட்டையும் ஆபத்துக்கு உதவும்.
 • அரசனை நம்பி புருசனை கைவிடாதே.
 • அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.
 • அரப்படிச்சவன் அங்காடி போனா விற்கவும் மாட்டான், வாங்கவும் மாட்டான்.
 • அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.
 • அரைக் காசுக்கு அழிந்த கற்பு ஆயிரம் காசு கொடுத்தாலும் கிடைக்குமா?
 • அரை கிணறு தாண்டாதே.
 • அறப்படிச்ச மூஞ்சூறு கழுநீர் பானைக்குள்ள விழுந்தது.
 • அறக்கப் பறக்கப் பாடுபட்டாலும் படுப்பதற்கு பாயில்லை.
 • அறச் செட்டு முழு நட்டம்.
 • அற்பத் துடைப்பமானாலும் உள்தூசியை அடக்கும்.
 • அற்ப ஆசை கோடி தவத்தைக் கெடுக்கும்.
 • அறுப்பு காலத்தில் எலிக்கு ஐந்து பொண்டாட்டி.
 • அறுக்க முடியாதவன் இடுப்பைச் சுற்றி ஆயிரம் கருக்கரிவாள்.
 • அறிந்து அறிந்து செய்கிற பாவத்தை அழுது அழுது தொலைக்க வேண்டும்.
 • அறிவில்லார் தமக்கு ஆண்மையுமில்லை.
 • அறிய அறிய கெடுவார் உண்டா?
 • அறிவீனருக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.
 • அறமுறுக்கினால் அற்றும் போகும்.
 • அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்.
 • அள்ளுவது எல்லாம் நாய் தனக்கு என்றே எண்ணுமாம்.
 • அக்காள் ஆனாலும் சக்களத்தி சக்களத்தி தான்.
 • அகலக் கால் வைக்காதே.
 • அகல உழுகிறதைவிட ஆழ உழு.
 • அகழியில் விழுந்த முதலைக்கு அதுவே வைகுந்தம்.
 • அகாரியத்தில் பகீரதப் பிரயத்தனமா?
 • அமாவாசை சோறு என்றைக்கும் அகப்படுமா?
 • அஷ்டமத்துச் சனி அழுதாலும் விடாது.
 • அவசரம் என்றால் அண்டாவிலும் கைநுழையாது.
 • அவிசாரி ஆனாலும் முகராசி வேணும், அங்காடி போனாலும் கைராசி வேணும்.
 • அவசரமாக கல்யாணம் அன்றாடம் புலம்பல்.
 • அவசரக்காதல் சீக்கிரம் சூடாகி சீக்கிரம் குளிர்ந்து விடும்.
 • அழகுக்காக கல்யாணம் இரவில் இன்பம் பகலில் துன்பம்.
 • அள்ளிக் கொடுத்தால் சும்மா. அளந்து கொடுத்தால் கடன்.
 • அளக்கிற நாழி அகவிலை அறியுமா?
 • அழுகிற ஆணையும் சிரிக்கிற பெண்ணையும் நம்பாதே.
 • அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?
 • அயலூரானுக்கு ஆற்றோரம் பயம். உள்ளாரானுக்கு மரத்தடியில் பயம்.
Clip to Evernote