தத்துவங்கள்

* சிந்திக்கத் தெரியாதவர்கள் கடைசி வரையிலும் தொண்டர்களாகவே இருக்கிறார்கள்.

* நீ காதலிக்கிறாயா, காதலிக்கப்படுகிறாயா என்பதில் ஒளிந்திருக்கிறது யார் நீ என்கிற மகத்துவம்!

* ‘பொதுவாக’ எனத் தொடங்கும் கட்டுரைகள் எல்லாமே, பொதுவாக நம்பகத் தன்மை அற்றது எனப் பொருள் கொள்க!

* யாரும் செய்துபார்க்க மாட்டார்கள், அப்படியே செய்து பார்த்தாலும் வழக்குப் போட்டு வம்புக்கு இழுக்க மாட்டார்கள் என்கிற தைரியமே சமையல் குறிப்புகளை எழுதித் தள்ளுவதற்கு காரணமாக இருக்கிறது.

* இரவு விழித்துக்கொண்டுதான் இருக்கிறது. நாம்தான் உறங்கிவிடுகிறோம்.

* எல்லாமும் பத்திரமாக இருக்கிறது. எதுவும் இல்லாத போது!

Clip to Evernote